திறன் அடிப்படையில் பொறியாளராக உதவும் புதிய சான்றிதழ் திட்டம்

திறன் அடிப்படையில் பொறியாளராக உதவும் புதிய சான்றிதழ் திட்டம்

1 mins read
1d6b0965-b7cd-4dae-96b7-5c07ab6c5f80
கோ அஹெட் சிங்கப்பூர் நிறுவனத்தின் மூத்த பொறியியல் மேற்பார்வையாளர் அல்ஃபியன் நூர்தின் (இடது), எஸ்பிஎஸ் டிரான்சின் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப அலுவலர் தாண்டவராயன் ஆகிய இருவரும் இந்தத் திட்டங்களின் கீழ் தங்களது பொறியாளராகும் கனவை எட்டிப் பிடித்தவர்கள். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கல்வித் தகுதி இல்லாதபோதும் போதிய தேர்ச்சிகளையும் தொழிலக அனுபவமும் பெற்றிருக்கும் தொழில்நுட்பர்களும் தொழில்நுட்பவியலாளர்களும் புதிய சான்றிதழ் திட்டம் மூலம் பொறியாளராவது எனும் தங்களது கனவை நனவாக்கலாம்.

உரிமம் பெற்ற பொறியியல் தொழில்நுட்பவியலாளர் மற்றும் தொழில்நுட்பர் சான்றிதழ் திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப் பட்டது.

'தேசிய பொறியியல் வாழ்க்கைத்தொழில் முன்னேற்றக் கல்விப் பாதை'யின்கீழ் வரும் இத்திட்டம், உரிமம் பெற்ற பொறியியல் தொழில்நுட்பர் (CETn), உரிமம் பெற்ற பொறியியல் தொழில்நுட்பவியலாளர் (CETg), உரிமம் பெற்ற பொறியாளர் (CEng) என மூன்று சான்றிதழ் நிலைகளை உள்ளடக்கியது.

சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் நேற்று இடம்பெற்ற இத்திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங், இந்தத் தேர்ச்சி அடிப்படையிலான வழிமுறை நமது முறையான உயர்கல்விப் பாதையை முழுமை பெறச் செய்யும் என்றார்.