50,000 பேரை வேலைக்கு எடுத்த 14,000 நிறுவனங்கள்

வேலை உரு­வாக்­கத்­திற்­கான ஊக்­கு­விப்­புத் திட்­டங்­கள் மூலம் 14,000 நிறு­வ­னங்­கள் கிட்­டத்­தட்ட 50,000 பேரை வேலை­யில் அமர்த்­தி­யி­ருப்­ப­தாக முன்­னோடி மதிப்­பீ­டு­கள் தெரி­விக்­கின்­றன. புதி­தாக வேலை­யில் சேர்க்­கப்­பட்­டோ­ரில் ஏறக்­கு­றைய பாதிப் பேர் 40 வய­தும் அதற்­கும் மேற்­பட்­ட­வர்­கள். நிறு­வ­னங்­கள் உள்­ளூர் ஊழி­யர்­களை வேலைக்கு எடுப்­பதை ஊக்­கு­விக்­கும் வகை­யில், அந்த ஊழி­யர்­க­ளின் ஊதி­யம் தொடர்­பில் நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கும் பொருட்டு வேலை உரு­வாக்­கத்­திற்­கான ஊக்­கு­விப்­புத் திட்­டம் மூலம் $1 பில்­லி­யன் ஒதுக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதத்­தில் இருந்து இவ்­வாண்டு பிப்­ர­வரி மாதம் வரை உள்­ளூர் ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்­தும் நிறு­வ­னங்­க­ளுக்கு, ஓராண்டு காலத்­திற்கு அவ்­வூ­ழி­யர்­க­ளின் மாத ஊதி­யத்­தில் முதல் 5,000 வெள்­ளி­யில் 25% மானி­யம் வழங்­கப்­படும். அதே நேரத்­தில், ஊழி­யர்­கள் 40 வய­தும் அதற்­கும் மேற்­பட்­ட­வராக இருந்­தால் அந்த மானி­யம் 50 விழுக்­கா­டாக இருக்­கும்.

இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­கள் நல்­ல­தொரு தொடக்­கத்­தைப் போல ஊக்­க­ம­ளிக்­கின்­றன என்று மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ குறிப்­பிட்­டார். “கொவிட்-19 தொற்று ஏற்­ப­டுத்­திய பாதிப்­பில் இருந்து நிறு­வனங்­க­ளின் மீட்சி ஏற்ற இறக்­க­மா­கவே இருக்­கும் என்­பதை நாங்­கள் அறிந்­துள்­ளோம். சில நிறு­வ­னங்­கள் சூழ­லுக்கு ஏற்ப தங்­களை மாற்­றிக்­கொள்­ளத் தடு­மா­ற­லாம். மற்ற நிறு­வ­னங்­கள் புதிய வளர்ச்சி நட­வ­டிக்­கை­க­ளால் மேலும் பலரை வேலைக்கு அமர்த்­தக்­கூ­டும்,” என்­றார் திரு­வாட்டி டியோ.

‘செலக்ட் குழும’ உண­வுச் சேவை­ நிறு­வ­னத்­திற்கு நேற்று வரு­கை­பு­ரிந்­த­போது அமைச்­சர் இவ்­வாறு சொன்­னார். ஆட்­கு­றைப்பு செய்­யும் துறை­களில் இருந்து, விரி­வாக்­கம் காணும், ஆள்­சேர்க்­கும் மற்ற துறை­க­ளுக்கு ஊழி­யர்­கள் மாற வேலை உரு­வாக்­கத்­திற்­கான ஊக்­கு­விப்­புத் திட்­டம் உத­வு­கிறது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

“ஆயி­னும், உட­ன­டி­யாக விரி­வாக்­கம் செய்ய நிறு­வ­னங்­கள் தயங்­க­லாம். வேலைக்கு ஆள் சேர்க்குமுன் தங்­க­ளுக்­கான வாய்ப்­பு­களை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள அவை விரும்­ப­லாம்,” என்­றார் திரு­வாட்டி டியோ. “ஆட்­சேர்ப்­பிற்கு உந்­து­தல் அளிக்­க­வும் நிறு­வ­னங்­கள் தங்­களது ஆட்­சேர்ப்­புத் திட்­டங்­களை முன்­வைப்­பதை ஊக்­கு­விக்­க­வும் சிங்­கப்­பூ­ரர்­களை வேலைக்­கு எடுப்பதை முடுக்­கி­வி­டு­வ­துமே வேலை உரு­வாக்­கத்­திற்­கான ஊக்கு­விப்­புத் திட்­டத்­தின் நோக்­கம்,” என்று அவர் விளக்­கி­னார்.

இந்­தத் திட்­டம் மேலும் நீட்­டிக்­கப்­பட வேண்­டுமா என்­பது குறித்து தமது அமைச்சு மதிப்­பிட்டு வரு­கிறது என்­றும் அவர் சொன்­னார். ஆக அதி­க­மாக, உண­வுச் சேவைத் துறை­யில் 7,700 உள்­ளூர் பணி­யா­ளர்­கள் வேலை­யில் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­ட­னர். மொத்த விற்­பனை, நிபு­ணத்­து­வச் சேவை­, கட்­டு­மா­னம், கல்வி ஆகிய துறை­கள் அடுத்­த­டுத்த இடங்­க­ளைப் பிடித்­தன. பணி­ய­மர்த்­த­லில் ஆத­ரவு வழங்கி உத­வு­வ­தில் இந்­தத் திட்­டம் பய­னுள்ள ஒன்­றாக இருந்து வரு­வதை நிறு­வ­னங்­க­ளு­டன் நிபு­ணர்­களும் ஒத்­துக்­கொண்­ட­னர்.

“உள்­ளூர் ஊழி­யர்­களை வேலைக்கு எடுப்­ப­தில் வள­ரும் நிறு­வ­னங்­க­ளுக்கு இத்­திட்­டம் ஆத­ர­வ­ளித்து வரு­கிறது. இத்­திட்­டம் தொடங்­கப்­பட்­ட­தில் இருந்து எங்­கள் நிறு­வ­னத்­தில் கிட்­டத்­தட்ட 50 உள்­ளூர் ஊழி­யர்­களை முழு­நே­ரப் பணி­யில் அமர்த்தி இருக்­கி­றோம்,” என்­றார் ‘செலக்ட் குழும’ நிர்­வாக இயக்­கு­நர் வின்­சென்ட் டான்.

கடந்த செப்­டம்­ப­ரில் இருந்து தங்­க­ளது நிறு­வ­னத்­தில் இரு­ப­துக்­கும் மேற்­பட்ட உள்­ளூர் ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்தி இருப்­ப­தா­கக் கூறி­னார் ‘சோல் கார்­டன்’ குழு­மத்­தின் பொது மேலா­ளர் கேரி லாம். “வெளி­நாட்­டுத் திற­னா­ளர்­களை நம்­பி­யி­ருப்­ப­தற்­குப் பதி­லாக, உள்­ளூர் ஊழி­யர்­களை வேலைக்கு எடுப்­ப­தற்கு அதி­க­மான உண­வுச் சேவை நிறு­வ­னங்­களை ஊக்­கு­விக்­கும்,” என்று திரு லாம் சொன்­னார்.

ஆட்­சேர்ப்பு தொடர்­பில் உறு­தி­யான முடி­வெ­டுப்­ப­தற்கு இந்­தத் திட்­டம் உந்­து­சக்­தி­யாக இருந்து நிறு­வ­னங்­க­ளுக்கு உதவி வரு­கிறது என்று சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் சங்­கத்­தின் தலை­வர் குர்ட் வீ கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!