கடப்பிதழுக்கான விண்ணப்பங்கள் குறைந்தன

கடப்பிதழுக்கான விண்ணப்பங்கள் குறைந்தன

1 mins read
43ab49c5-d11d-4660-9ee5-ded9c44d06b9
-

கொவிட்-19 கிருமிப்பரவல் உலகிலுள்ள பல்வேறு பகுதிகளில் ஓயாது தொடரும் வேளையில் கூடிய விரைவில் வெளிநாட்டுப் பயணங்கள் செய்வதற்கான சாத்தியம் குறைந்து வருவதால் கடப்பிதழ் புதுப்பிப்புகள் மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்தாண்டு குடிநுழைவு, சோதனை சாவடி ஆணையத்தில் 320, 709 கடப்பிதழ்கள் விநியோகம் செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை, 2019ஆம் ஆண்டில் 711,617ஆக இருந்தது.

பழைய கடப்பிதழ்கள் காலாவதி ஆகப் போகும்போது அல்லது ஒருவருக்கு கடப்பிதழ் இல்லாதபோது கடப்பிதழ்கள் தரப்படும். ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கும் கடப்பிதழ் புதுப்பிக்கப்படவேண்டும். அடையாள அட்டையைப் போல கடப்பிதழ் குடிமக்களுக்குக் கட்டாயமில்லை என்றும் அதனைப் புதுப்பிக்காமல் இருந்தால் அதற்கு தண்டனைகள் தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.