தனியாகக் கடை தொடங்கும் 'பசார் மாலாம்' வியாபாரிகள்

தனியாகக் கடை தொடங்கும் 'பசார் மாலாம்' வியாபாரிகள்

2 mins read
7d92b3fd-3e1a-4d01-8227-614aa845da12
முப்பதாண்டுக்கும் மேலாக 'பசார் மாலாம்' சந்தையில் உணவு தயாரித்து, விற்றுவந்த 'டியோசியூ மீட் பஃப்' நிறுவனம் உட்லண்ட் ஸில் தொடங்கி இருக்கும் கடை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தடுப்­பூ­சி­கள் போடப்­பட்டு வரும் நிலை­யி­லும் சமூக அள­வி­லான கொவிட்-19 சம்­ப­வங்­கள் அதி­க­ரிக்­கின்­றன. எனவே இவ்­வாண்டு சீனப் புத்­தாண்டு காலத்­தில் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­ப­டு­கின்­றன.

இப்­ப­டிப்­பட்ட நிலை­மை­யில், சிங்­கப்­பூ­ரில் மிக­வும் பிர­ப­ல­மாக விளங்­கிய இர­வுச் சந்தை எனப்­படும் 'பசார் மாலாம்' மீண்­டும் வரு­வ­தற்­கான அறி­குறி எது­வும் இப்­போ­து­வரை காணப்­ப­ட­வில்லை. எனவே பசார் மாலாம் வியா­பா­ரி­களில் ஒரு­சி­லர் நிரந்­த­ரக் கடை­களை வைக்­கத் தொடங்­கி­விட்­ட­னர். பசார் மாலாம் சந்தையில் முன்­னணி வகித்து வந்த 'டியோ­சியூ மீட் பஃப்' என்­னும் உணவு தயா­ரிப்பு நிறு­வ­னம், பகுதி பகு­தி­யா­கச் ெசன்று கடை­வி­ரிக்­கும் நாடோ­டித்­தன பாணி­யைக் கை விட்டு முழு­மை­யாக ஓரி­டத்­தில் கடையை நிறுவி வியா­பா­ரம் செய்து வரு­கிறது.

உட்­லண்ட்­ஸில் உள்ள வேவ் 9 கட்­ட­டத்­தில் கடந்த செப்­டம்­பர் மாதம் கடை­யைத் தொடங்­கிய இந்­நி­று­வ­னத்­தின் இரண்­டாம் தலை­முறை உரி­மை­யா­ளர் கெய்த் ஹூ, 53, முதல் இரண்டு மாதங்­கள் தங்­க­ளது வழக்­க­மான வாடிக்­கை­யா­ளர்­கள் தேடி வந்து உணவு வாங்­கி­ய­தா­கக் கூறி­னார்.

கிட்­டத்­தட்ட முப்­பது ஆண்­டு­க­ளாக பசார் மாலாம் வியா­பா­ரத்­தில் ஈடு­பட்டு வந்த இந்­நி­று­வ­னத்­துக்கு சிங்­கப்­பூர் முழு­வ­தும் பல வாடிக்­கை­யா­ளர்­கள் உள்­ள­னர். ஆயி­னும் கடை தொடங்கி இரண்டு மாதம் ஆன நிலை­யில் வாடிக்­கை­யா­ளர் வருகை சரி­யத் தொடங்­கி­ய­தா­கக் கூறி வருத்­தப்­பட்­டார் திரு ஹூ.

இவர் அள­வுக்­குக் கடை வைக்க வசதி இல்­லாத பலர் கைவி­டப்­பட்­ட­தாக உண­ரு­வ­தா­க­வும் மேலும் சிலர் எங்­கி­ருக்­கி­றார்­கள் என்றே தெரி­ய­வில்லை என­வும் ஐவன் ஹோ, 65, எனப்­படும் பசார் மாலாம் வியா­பாரி கூறி­னார். இவ­ரும் கூடா­ரக் கடை ஒன்றை தொடங்கி உள்­ளார்.

இதற்­கி­டையே, தங்­க­ளு­டன் அடிக்­கடி இணைந்து பணி­யாற்­றக்­கூ­டிய 100 பசார் மாலாம் வியா­பா­ரி­கள் இருப்­ப­தா­க­வும் அவர்­களில் ஐந்­தில் ஒரு­வர் தனி­யா­கக் கடை­க­ளைத் தொடங்கி இருப்­ப­தா­க­வும் 'சிங்­கப்­பூர் நைட் பஸார்' நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி வெய்ன் லிம், 36, கூறி­னார்.