சிங்கப்பூரில் இரு இடங்களில் ஓட்டுநரில்லா பேருந்துகளில் பயணிகள் செல்லலாம். 2015ல் சாலைகளில் ஓட்டுநரில்லாப் பேருந்துகள் முதலில் சோதிக்கப்பட்டன. அச்சோதனைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
'எஸ்டி என்ஜினியரிங்' வழிநடத்தும் புதிய பேருந்துச் சேவைகளை எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் ஆகிய இரு பொதுப் போக்குவரத்து நிறுவனங்களும் இயக்குகின்றன.
சிங்கப்பூர் அறிவியல் பூங்கா 2லும் ஜூரோங் தீவிலும் பேருந்துச் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த ஓட்டுநரில்லாப் பேருந்துகளில் செல்ல விரும்பும் பயணிகள் சிறிய கட்டணம் செலுத்த வேண்டும்.
உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் வணீக ரீதியாக இந்தப் பேருந்துச் சேவைகளை விரிவுபடுத்த பங்குதாரர்களுக்குத் தகவல்களை இந்த ஏற்பாடு வழங்கும்.