‘சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி மீது உள்ள நம்பிக்கை அதிகரிக்கும்’

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தடுப்­பூசி மீதான நம்­பிக்கை அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வோர் எண்­ணிக்கை அதி­க­ரிப்­பதை தலைமை சுகா­தார விஞ்­ஞானி டான் சோர் சுவான் நேற்று சுட்­டி­னார்.

“கொவிட்-19 தடுப்­பூசி மீது உள்ள நம்­பிக்கை அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அதை­ய­டுத்து, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வோர் எண்­ணிக்கை வெகு­வாக உய­ரும் என நம்­பப்­ப­டு­கிறது,” என்று தடுப்­பூசி மீதான நம்­பிக்­கையை உயர்த்­து­வது தொடர்­பாக உல­கப் பொரு­ளி­யல் கருத்­தரங்கு ஏற்­பாட்­டில் நடை­பெற்ற மெய்­நி­கர் கலந்­து­ரை­யா­ட­லில் அவர் தெரி­வித்­தார். கடந்த ஆண்டு கொவிட்-19 தடுப்­பூ­சி­யைக் கண்டு­ பி­டிக்க பல நாடு­க­ளைச் சேர்ந்த மருத்­து­வக் குழுக்­கள் விரைந்­த­போது அது எந்த அள­வுக்­குப் பாது­காப்­பா­ன­தாக இருக்­கும் என்­ப­தில் பல­ரி­டையே சந்­தே­கம் நில­வி­யது.

ஆனால் தற்­போது பல நாடு­களில் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது தொடங்­கி­யி­ருக்­கும் வேளை­யில் அதன் மீது உள்ள நம்­பிக்கை அதி­க­ரித்து வரு­வ­தாக கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்ற ஆய்­வா­ளர் திரு பென் பேஜ் கூறி­னார்.

இந்­நி­லை­யில், அங் மோ கியோ, தஞ்­சோங் பகார் ஆதிய வட்­டா­ரங்­களில் வசிக்­கும் 70 வய­துக்­கும் மேற்­பட்ட முதி­யோ­ருக்கு கொரோனா தடுப்­பூசி போடும் திட்­டம் நாளை தொடங்க இருக்­கிறது.

அதற்கு முன்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வீடு வீடா­கச் சென்று அது­பற்றி பேசி­னர். கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது குறித்து முதி­ய­வர்­கள் சிலர் இன்­னும் முடி­வெ­டுக்­க­வில்லை என்று அதி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள பல­துறை மருந்­த­கங்­களில் முன்­ப­திவு செய்­து­கொள்ள ஒவ்­வொரு குடி­யி­ருப்­பி­லி­ருந்து ஏறத்­தாழ 5,000லிருந்து 10,000 வரை­யி­லான முதி­ய­வர்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கும் கடி­தங்­கள் அனுப்­பி­வைக்­கப்­படும். தடுப்­பூசி மருந்து வீணா­கா­மல் இருக்க இந்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

தடுப்­பூசி தயார்­நி­லை­யில் வைக்­கப்­பட்­டும் அதைப் போட்­டுக்­கொள்ள யாரும் வரா­விட்­டால் அது வீணா­கி­வி­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தயங்­கு­வ­தாக முதி­ய­வர்­கள் சிலர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் தெரி­வித்­த­னர். ஃபைசர்-பாயோஎன்­டெக் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டா­லும் கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­ப­டாது என்ற உத்­த­ர­வா­தம் இல்லை என்று முதி­ய­வர்­கள் சிலர் அக்­கறை தெரி­வித்­த­னர்.

அத­னால் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தால் பய­னில்லை என்று சிலர் கருத்து தெரி­வித்­த­னர். மறு­மு­னை­யில், கிரு­மித்­தொற்று ஏற்ப­டா­மல் இருக்க தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தயா­ராக இருப்­ப­தாக சிலர் தெரி­வித்­த­னர்.

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக முதி­ய­வர்­கள் அதி­கம் பாதிப்­புக்­குள்­ளா­கும் ஆபத்து இருப்­ப­தாக மருத்­துவ நிபு­ணர்­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.

கொரோனா கிரு­மித்­தொற்­றால் இளை­ஞர்­க­ளை­வி­மு­தி­ய­வர்­கள் மர­ணம் அடை­யும் சாத்­தி­யம் அதி­கம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!