என்யுஎஸ் மாணவர்களை ஊழியரணிக்கு தயார்ப்படுத்தும் புதிய கைபேசி செயலி

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் (என்­யு­எஸ்) சேர்ந்த 13,000க்கும் அதி­க­மான மாண­வர்­கள், ஊழி­ய­ர­ணிக்­குத் தங்­க­ளைத் தயார்ப்­ப­டுத்த உத­வும் கைபேசி செயலி ஒன்­றைப் பதி­வி­றக்­கம் செய்­துள்­ள­னர்.

‘NUS career+’ என்று அழைக்­கப்­படும் இச்­செ­யலி நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்கி வைக்­கப்­பட்­டது.

மாண­வர்­கள் தங்­க­ளது கல்வி, வாழ்க்­கைத் தொழில் பாதைக்­குத் திட்­ட­மிட செயற்கை நுண்­ண­றிவு, பரந்த அளவிலான தரவுகளை இந்தக் கைபேசி ­செ­யலி பயன்­படுத்­து­கிறது.

மாண­வர்­கள் பெற்­றுள்ள திறன்­களை­யும் அவர்­க­ளி­ட­மி­ருந்து நிறு­வ­னங்­கள் எதிர்­பார்க்­கும் திறன்­களை­யும் இந்தச் ­செ­யலி கண்­கா­ணிக்­கிறது.

என்­யு­எஸ், உள்­ளூர் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான ‘ஜாப்­டெக்’ ஆகி­யவை இச்­செ­ய­லியை இணைந்து உரு­வாக்­கி­யுள்­ளன.

இள­நி­லைப் பட்­டக்­கல்­வியை மேற்­கொள்­ளும் 32,000 என்­யு­எஸ் மாண­வர்­களும் இச்­செ­ய­லிக்­குப் பதிவு செய்­து­கொள்­ள­லாம். மாண­வரின் கல்வி நிலை­யைப் பொறுத்து அவ­ரது திற­னுக்­கேற்ப வழி­காட்­டு­தலை வழங்­கும்.

எடுத்­துக்­காட்­டாக, ஒரு குறிப்­பிட்ட திறனை மாண­வர் பெற வேண்­டி­யி­ருந்­தால், அதற்­கான பாடங்­க­ளை­யும் செயலி பரிந்­து­ரைக்­கும்.

மாண­வர்­க­ளுக்கு வேலை­யைத் தேடித் தரும் வழக்­க­மான இணை­ய­வா­சல்­கள், மாண­வர்­க­ளின் தேடு­தல் விருப்­பத்­தின் அடிப்­ப­டை­யில் பரிந்­து­ரை­களை வழங்­கு­வ­தாக என்­யு­எஸ் குறிப்­பிட்­டது.

ஆனால் தனது செயலி, அன்­றா­டம் வெளி­யி­டப்­படும் மில்­லி­யன் கணக்­கான வேலை வாய்ப்­பு­களை ஆராய்ந்து, அந்­தந்த மாண­வ­ரின் தகு­திக்கு ஏற்ற வேலை­க­ளைப் பரிந்­து­ரைப்­ப­தா­கச் சொன்­னது.

“இந்த ஏற்­பாடு மாண­வர்­களுக்­குப் பரிட்­ச­ய­மில்­லாத வேலை­கள் உட்­பட பரந்த வேலை வாய்ப்­பு­களை வழங்­கு­கிறது,” என்று என்­யு­எஸ் விவ­ரித்­தது.

இச்­செ­ய­லி­யில் மற்ற சில சிறப்­பம்­சங்­களும் உள்­ளன. எடுத்­துக்­காட்­டாக, எதிர்­கா­லத்­தில் எந்­தெந்த திறன்­கள் மாண­வர்­களுக்கு தேவைப்­படும் என்­பதை இது காட்டு­கிறது.

இந்த வாரம் மூன்று நாட்­களுக்கு என்­யு­எஸ் வேலை வாய்ப்­புக் கண்­காட்­சியை என்­யு­எஸ் நடத்­து­கிறது.

இது­வரை என்­யு­எஸ் நடத்­தி­யுள்ள ஆகப்­பெ­ரிய மெய்­நி­கர் வேலை கண்­காட்சி இதுவே.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!