தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதுப்பிக்கப்பட்ட இரண்டு கடற்படைக் கப்பல்கள் சுற்றுக்காவலில் மீண்டும் இணைந்தன

1 mins read
820f7817-92dc-4339-8d2c-74950bff6a85
புதுப்பிக்கப்பட்ட கப்பல்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடும். புதிய சுற்றுக்காவல் பிரிவு நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. படம்: GOV.SG -

சிங்­கப்­பூர் குடி­ய­ர­சுக் கடற்­ப­டைக்­குச் சொந்­த­மான இரண்டு கப்­பல்­கள் சுற்­றுக்­கா­வல் பணி­யில் மீண்­டும் இணைந்­துள்­ளன.

கடற்­ப­டைக்­குச் சொந்­த­மான மற்ற சுற்­றுக்­கா­வல் கப்­பல்­க­ளு­டன் இணைந்து அவ்­விரு கப்­பல்­களும் சிங்­கப்­பூ­ரின் கடற்­ப­கு­தி­யைப் பாது­காக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேம்­ப­டுத்­தப்­பட்ட தொழில்­நுட்­பத்­து­டன் கள­மி­றங்­கி­யுள்ள இந்த இரண்டு கப்­பல்­கள் அதி­ந­வீன எச்­ச­ரிக்கை ஒலி, ஒளி தொழில்­நுட்­பத்­தைக் கொண்­டுள்­ளன. அது­மட்­டு­மல்­லாது, கடற்­ப­கு­தி­யைப் பாது­காக்க தேவை­யான புதிய, மேம்­ப­டுத்­தப்­பட்ட தொழில்­நுட்­பத்தை அவை கொண்­டுள்­ளன.

புதிய கடற்­து­றைப் பாது­காப்­புப் படை நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

அதில் சென்­டி­னல், கார்­டி­யன் என்று அழைக்­கப்­படும் இந்த இரண்டு புதுப்­பிக்­கப்­பட்ட கப்­பல்­களும் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

புரொடெக்­டர், பேஸ்­டி­யன் ஆகிய இரண்டு கப்­பல்­களும் அடுத்த சில மாதங்­களில் புதுப்­பிக்­கப்­பட்டு சுற்­றுக்­கா­வல் பிரி­வு­டன் சேர்க்­கப்­படும் என்று தற்­காப்பு அமைப்பு கூறி­யது.

இந்­தக் கப்­பல்­கள் ஏறத்­தாழ 20 ஆண்­டு­க­ளாக சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­பட்டு வரு­கின்­றன.

அவற்­றுக்­குப் பதி­லாக வேறு வகை கப்­பல்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

சுற்­றுக்­கா­வ­லுக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட கப்­பல்­களில் இரண்டு கப்­பல்­கள் சுற்­றுக்­கா­வல் பணியிலிருந்து மீட்­டுக்­கொள்­ளப்­பட்­டன. புதிய சுற்­றுக்­கா­வல் பிரிவை அறி­மு­கப்­ப­டுத்­தும் நிகழ்ச்சி ஆர்­எஸ்­எஸ் சிங்­கப்­பூரா-சாங்கி கடற்­படை முகா­மில் நடை­பெற்­றது.

அதற்­குக் கடற்­ப­டைத் தலை­வர் ஏரன் பெங் தலைமை தாங்­கி­னார்.

நிகழ்ச்­சி­யில் சிங்­கப்­பூர் குடி­ய­ர­சுக் கடற்­ப­டை­யின் மூத்த அதி­கா­ரி­களும் கடற்­துறை அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­களும் கலந்­து­கொண்­ட­னர்.