சிங்கப்பூரில் புதிதாக 34 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் வெளிநாட்டில் கிருமித்தொற்று ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் வீட்டில் தங்கும் உத்தரவு விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
வியாழக்கிழமை பதிவு செய்த சம்பவத்துடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்றின் எண்ணிக்கை 59, 425க்கு உயர்ந்துள்ளது.
சமூகத்திலோ ஊழியர் தங்கும் விடுதிகளிலோ இன்று எந்தப் புதிய சம்பவங்களும் பதிவாகவில்லை.
நேற்று புதிதாக 25 பேர் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.

