கொவிட் தடுப்பூசி - சில குறிப்புகள்

கொவிட் தடுப்பூசி - சில குறிப்புகள்

1 mins read
b0a0d008-a9ce-4a20-9ebf-e7518929a42e
-

சமூக மன்றங்களில் தடுப்பூசிகள் நேற்று முதல் கொடுக்கப்பட்டு வந்தன. இதனை முதலில் தொடங்கிய தஞ்சோங் பகார் சமூக மன்றம், 70 வயதுக்கும் மேற்பட்டவருக்கு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.

அங் மோ கியோவிலுள்ள டெக் கீ சமூக மன்றம், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தனது தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கும். இந்த இரண்டு மன்றங்களுமே தலா 2,000 பேருக்கு நாள் தோறும் வழங்கி வருகிறது.

தஞ்சோங் பகாரிலும் அங் மோ கியோவிலும் உள்ள மருந்தகங்களில் மூத்தோருக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த இரண்டு வட்டாரங்களில் முதியோர் அதிகம் உள்ளதால் இவை தேர்ந்தெடுக்கப்பட்டன.

தடுப்பூசியை வாங்குவதற்கான முறை இது:

  • மூத்தோர் தங்களது அடையாள அட்டைகளைக் கொண்டுவந்து சமூக மன்றங்களில் முன்பதிவு செய்யவேண்டும்.
  • தடுப்பூசி போடும் நாள் அன்று: மீண்டும் அடையாள அட்டையுடன் தடுப்பூசி போடும் இடத்திற்குச் செல்லவேண்டும்
  • தடுப்பூசி கரத்தின் மேற்பகுதியில் போடப்படும்.அதன் பிறகு உடலில் வேறு மாற்றங்கள் தென்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஓர் இடத்தில் காத்திருக்க வேண்டும்.
  • கரத்தில் இலேசான வலி இருப்பது இயல்பு. ஆனால் மயக்கம், தலைவலி அல்லது கரத்தில் தடிப்புகள் இருந்தால் மருத்துவரால் கவனிக்கப்படுவீர்கள்
  • மூன்று வாரம் கழித்து இரண்டாவது முறை ஊசியைப் பெறவேண்டும். தடுப்பூசி வேலை செய்ய அதனை இரண்டு முறை போட்டுக்கொள்வது அவசியமாகும்.