சிங்கப்பூரில் தொடர்ந்து 7வது நாளாக சமூக அளவில் பாதிப்பில்லை

சிங்கப்பூரில் தொடர்ந்து 7வது நாளாக சமூக அளவில் பாதிப்பில்லை

1 mins read
1e08c7c5-9daf-49a5-997d-df18afca977c
-

சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி மேலும் 24 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். அவர்கள் சிங்கப்பூர் வந்தடைந்தவுடன் அவர்களுக்கு வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து ஏழாவது நாளாக சமூக அளவில் பாதிப்பு இல்லை. அதுமட்டுமல்லாது, வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலும் யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை.

புதிதாக பாதிக்கப்பட்டிருப்பவர்களுடன் சேர்த்து சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,449ஆக அதிகரித்தது.

கடந்த வாரம் சமூக அளவில் ஒருவருக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தது. அதற்கு முந்தைய வாரத்தில் சமூக அளவில் 21 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, கிருமித்தொற்று ஏற்பட்டதாக நேற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இருவருக்கு பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய கிருமி தொற்றியிருப்பதாக தெரியவந்துள்ளது.

நேற்று புதிதாக 34 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருந்ததாக அமைச்சு அறிவித்தது.