கொரோனா கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக இரண்டு உணவகங்களின் உரிமையாளர்கள் மீது வரும் செவ்வாய்க்கிழமையன்று குற்றம் சாட்டப்படவிருக்கிறது.
மார்க் எண்டர்பிரைஸ், கிம்ஸ் பிளேஸ் கடல் உணவு உணவகம் ஆகியவற்றுக்கு எதிராக நட
வடிக்கை எடுக்கப்படுகிறது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் அதை மூட பலமுறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் மார்க் என்டர்பிரைஸ் அதைப் புறக்கணித்த
தாகக் கூறப்படுகிறது.
பல மேசைகளில் ஐந்துக்கும் மேற்பட்டோரை அமர கிம்ஸ் பிளேஸ் கடல் உணவு உணவகம் அனு
மதித்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அந்த உணவகத்தில் கராவோக்கே நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டன.
இந்த விதிமீறல்களுக்காக இம்மாதம் 6ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 4ஆம் தேதி வரை மொத்தம் 30 நாட்களுக்கு உணவகத்தை மூட வேண்டும் என கிம்ஸ் பிளேஸ் கடல்உணவு உணவகத்துக்கு உத்தரவிடப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்ட 12 உணவகங்களில் இந்த இரண்டு உணவகங்களும் அடங்கும். உணவகங்களை மூட நான்கு உணவகங்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆறு உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதியன்று கிம்ஸ் பிளேஸ் கடல் உணவு உணவகத்தில் ஊழியர்களுக்கான ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்ததாக சிங்கப்பூர் ஸ்ட்ரெய்ட்ஸ் ஒயின் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்படும்.
அந்த ஒன்றுகூடலில் 26 ஊழியர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் தலா $300 அபராதம் விதிக்கப்பட்டது.
350 ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1ல் உள்ள சியாவ் யாவ் கெ உணவகம், 40 சாகோ ஸ்திரீட்டில் உள்ள மெயின் என்ட்ரஸ், லக்கி பிளாசாவில் உள்ள கிலினி கோப்பித்தியாம், 2 அலிவால் ஸ்திரீட்டில் உள்ள தியேன் யா ஹாய் ஜியாவ் கேடிவி ஆகியவை விதிமுறைகளை மீறியதால் அவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
உணவு மற்றும் பானம் சேவைகளை நடத்த உரிமம் வைத்திருக்கும் மதுபானக்கூடமான மெயின் என்ட்ரசில் எட்டுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் குழுக்கள் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
அதுமட்டுமல்லாது மதுபானக்கூடத்தில் வாடிக்கையாளர்கள் உரை நடத்தவும் அந்த மதுபானக் கூடம் அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன், இம்மாதம் 23ஆம் தேதியன்று மதுபானக்கூடத்துக்கு வந்த வாடிக்கையாளர்களின் உடல்வெப்பநிலையை அது சோதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிக விதிமுறைகளின்படி உணவகங்களில் வாடிக்கையாளர்கள் உரையாற்றவோ பாடவோ கூடாது. இம்மாதம் 26ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் என்று மெயின் என்ட்ரஸ் மதுபானக்கூடத்துக்கு சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் நான்கு உணவகங்களுக்கு தலா $1,000 அபராதமும் தொடர்ந்து விதிமுறைகளை மீறியதற்காக இன்னோர் இரண்டு உணவகங்களுக்கு தலா $2,000 அபராதமும் விதிக்கப்பட்டது
இந்நிலையில், கொவிட்-19 விதிமுறைகளை மீறியதற்காக மேலும் 131 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 22, 23ஆம் தேதிகளில் உணவகங்கள், கடைத்
தொகுதிகள், மற்ற பொது இடங்கள் ஆகியவற்றில் அரசாங்க அமைப்புகள் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டதால் விதிமுறைகளை மீறிய பலர் அகப்பட்டதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு தெரிவித்தது.
எட்டுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடிய விதிமீறலுக்காக 27 பேருக்கு தலா $300 அபராதம் விதிக்கப்பட்டது.
எஞ்சியுள்ள 104 பேரும் எட்டுக்கும் மேற்பட்டவர்களுடன் ஒன்றுகூடியதற்கும் மற்றவர்களுடன் பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் இருந்ததற்காகவும் அபராதம் விதிக்கப்பட்டது.

