தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் 113,000க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

2 mins read
534ee7dc-d82e-41d7-82f8-2e80a0e8bbda
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் முதல் ஃபைசர்-பயோ­என்­டெக் கொவிட்-19 தடுப்­பூ­சியை 113,000க்கும் மேற்­பட்­டோர் போட்­டுக்­கொண்­ட­தாக சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது. அவர்­களில் 432 பேருக்­குப் பக்­க­வி­ளை­வு­கள் ஏற்­பட்­ட­தா­க­வும் அவை பொது­வாக எல்­லாத் தடுப்­பூ­சி­க­ளா­லும் ஏற்­ப­டக்­கூ­டிய வழக்­க­மான பக்­க­வி­ளை­வு­கள்­தான் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

தடுப்­பூசி போடப்­பட்ட இடத்­தில் வலி மற்­றும் வீக்­கம், காய்ச்­சல், தலை­வலி, சோர்வு, தலைசுற்­றல், வாந்தி வரு­வது போன்ற உணர்வு, அரிப்பு மற்­றும் கண்­க­ளி­லும் உத­டு­க­ளி­லும் ஏற்­படும் வீக்­கம் போன்ற ஒவ்­வா­மை­யால் ஏற்­படும் பாதிப்­பு­கள் ஆகிய பக்­க­வி­ளை­வு­கள் ஏற்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கிறது.

ஆனால் இந்­தப் பக்­க­வி­ளை­வு­கள் சில நாட்­க­ளி­ல் தானா­கவே சரி­யா­கி­விட்­ட­தாக சுகா­தார அமைச்சு கூறி­யது.

மூன்று பேருக்கு மிக­வும் மோச­மான ஒவ்­வாமை ஏற்­பட்­டது. இவர்­கள் அனை­வ­ரும் குண­மா­கி­விட்­ட­னர். அவர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் ஒரு­நாள் தங்கி சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்­பி­விட்­ட­தாக அமைச்சு கூறி­யது. பாதிக்­கப்­பட்ட மூவ­ரும் 20 வய­துக்­கும் 30 வய­துக்­கும் உட்­பட்­ட­வர்­கள். அவர்­க­ளுக்கு அரிப்பு, முச்­சுத் திண­றல், உதடு வீக்­கம், தொண்­டை­யில் இறுக்­கம், தலைசுற்­றல் போன்ற பாதிப்­பு­கள் ஏற்­பட்­டன.

"தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட அனை­வ­ரும் அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­கப்­ப­டு­கின்­ற­னர். இந்த மூவ­ரி­டம் பாதிப்­பு­க­ளுக்­கான அறி­கு­றி­கள் உட­ன­டி­யா­கக் கண்­டு­

பி­டிக்­கப்­பட்டு அவர்­க­ளுக்­குத் தேவை­யான சிகிச்சை அளிக்­கப்­பட்­டது," என்று அமைச்சு தெரி­வித்­தது. வரும் திங்­கட்­கி­ழ­மை­யி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரில் உள்ள அனைத்­துப் பல­துறை மருந்­த­கங்­க­ளி­லும் முதி­யோ­ருக்கு கொவிட்-19 தடுப்­பூசி போடும் சேவை வழங்­கப்­படும் என்று சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது. தற்­போது ஒன்­பது பல­துறை மருந்­த­கங்­கள், 21 பொது சுகா­தார தயார்­நிலை மருந்­த­கங்­களில் மட்­டுமே முதி­யோ­ருக்கு தடுப்­பூசி போடப்­ப­டு­கிறது.