ஏதேனும் ஒரு சமூக மன்றத்திலிருந்து டிரேஸ்டுகெதர் கருவியைப் பெற்றுக்கொள்ளலாம்

ஏதேனும் ஒரு சமூக மன்றத்திலிருந்து டிரேஸ்டுகெதர் கருவியைப் பெற்றுக்கொள்ளலாம்

2 mins read
bbdb5603-081f-488f-8e6f-7fef57fd6cdc
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நாளை மறு­நா­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரில் உள்ள ஏதே­னும் ஒரு சமூக மன்­றம் அல்­லது நிலை­யத்­தி­லி­ருந்து பொது­மக்­கள் தங்­கள் டிரேஸ்­டு­கெ­தர் சாத­னத்­தைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

இதற்கு முன்பு அவ­ர­வர் தொகு­தி­களில் உள்ள சமூக மன்­றங்­கள் அல்­லது நிலை­யங்­க­ளி­லி­ருந்து மட்­டும் டிரேஸ்­டு­கெ­தர் சாத­னங்­க­ளைப் பெற முடிந்­தது.

டிரேஸ்­டு­கெ­தர் திட்­டத்­தின்­கீழ் இது­வரை 2.6 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான டிரேஸ்­டு­கெ­தர் சாத­னங்­கள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தோரை அடை­யா­ளம் காண இந்த டிரேஸ்­டு­கெ­தர் சாத­னங்­கள் உத­வும். அவ்­வாறு அடை­யா­ளம் காணப்­ப­டு­ப­வர்­கள் உட­ன­டி­யாக தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வர். இதன்­மூ­லம் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­த­லாம் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் இறு­தி­யில் 400,000 டிரேஸ்­டு­கெ­தர் சாத­னங்­கள் பெற்­றுக் கொள்­ளப்­பட்­டன.

தங்­கள் டிரேஸ்­டு­கெ­தர் சாத­னங்­களில் உள்ள பேட்­ட­ரி­கள் தீர்ந்­து­விட்­டாலோ அல்­லது சாத­னங்­கள் பழு­த­டைந்­து­விட்­டாலோ சமூக மன்­றங்­க­ளி­லி­ருந்து புதிய டிரேஸ்­டு­கெ­தர் சாத­னங்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம் என்று அறி­வார்ந்த தேசம், மின்­னி­லக்க அர­சாங்க அலு­வ­ல­கம் நேற்று தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டது.

டிரேஸ்­டு­கெதர் சாத­னத்­தில் சிவப்பு ஒளி விட்­டு­விட்டு எரிந்­தாலோ அல்­லது ஒளி விட்­டு­விட்டு எரி­வது நின்­று­விட்­டாலோ அதை மாற்ற வேண்­டும்.

நிமி­டத்­துக்கு ஒரு­முறை பச்சை ஒளி விட்­டு­விட்டு எரிந்­தால் சாத­னம் சரி­யாக இயங்­கு­கிறது என்று அர்த்­தம். கைபே­சி­யில் டிரேஸ்­டு­கெ­தர் செய­லி­யைப் பயன்­ப­டுத்த விரும்­பா­த­வர்­க­ளுக்­கும் கைபேசி இல்­லா­த­வர்­க­ளுக்­கும் இந்த டிரேஸ்­டு­கெ­தர் சாத­னம் உத­வி­யாக இருக்­கும்.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் 14ஆம் தேதி­யி­லி­ருந்து குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­கும் வேலை அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­போ­ருக்­கும் டிரேஸ்­டு­கெ­தர் சாத­னங்­களை இல­வ­ச­மாக 20 சமூக மன்­றங்­கள் விநி­யோ­கம் செய்­தன.

கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் 2ஆம் தேதி­யன்று கூடு­த­லாக 18 சமூக மன்­றங்­கள் டிரேஸ்­டு­கெ­தர் சாத­னங்­களை விநி­யோ­கம் செய்­யத் தொடங்­கின.