2021- மாதர் கொண்டாட்ட ஆண்டாக அறிவிப்பு

2021- மாதர் கொண்டாட்ட ஆண்டாக அறிவிப்பு

2 mins read
163bcf03-5dcd-4ffa-b3dd-9752fb2d2717
பெண்களுக்கான பொறுப்புகள் தொடர்பிலான மனப்போக்கு மாற்றத்தைச் சாதிப்பது முக்கிய பிரச்சினையாக உள்ளது.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

2021ஆம் ஆண்டை எஸ்ஜி மாதர் கொண்­டாட்ட ஆண்­டாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு பிர­க­ட­னப்­ப­டுத்­தும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூரை கட்டி உரு­வாக்கு­வ­தில் கடந்த காலத்­தி­லும் இப்­போ­தும் பெண்­கள் ஆற்­றி­வரும் தொண்­டை அங்­கீ­க­ரித்து கொண்­டா­டு­வ­தோடு சமூ­கத்­தில் பெண்­கள் வகிக்­கும் மிக முக்­கிய பங்கையும் இந்த எஸ்ஜி இயக்­கம் அங்­கீ­க­ரிக்­கிறது என்று பிர­த­மர் தெரி­வித்­துள்­ளார்.

பெண்­க­ளுக்குச் சரி­ச­ம­மான சமூ­கத்தை உரு­வாக்­கு­வது தொடர்ந்து இடம்­பெ­றும் முயற்சி என்­பதைச் சுட்­டிக்­காட்­டிய பிர­த­மர், வீட்­டி­லும் வேலை­யி­டத்­தி­லும் சமூகத்தி­லும் கடந்த பல ஆண்டு­களாக நாம் முன்­னேற்­றத்­தைச் சாதித்து இருக்­கி­றோம் என்­றார்.

இருந்­தா­லும் மனப்­போக்கை மேலும் மாற்ற வேண்­டிய தேவை இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். 'சிங்­கப்­பூர் மாதர் மேம்­பாட்­டுக் கலந்­து­ரை­யா­ட­ல் தொடரின்' நோக்­கம் இன்­னும் சிறந்த முறை­யில் மாதர்­க­ளுக்கு எப்­படி ஆத­ரவு அளிக்­க­லாம் என்­பதை நாம் புரிந்­து­கொள்­வ­தா­கும் என்று அவர் தெரி­வித்­தார்.

பெண்­கள் தங்­கள் விருப்­பங்­களை நிறை­வேற்­றிக்­கொள்­ளும் ஆற்­றலை அவர்­க­ளி­டம் ஏற்­ப­டுத்­தித் தரு­வ­தும் இதன் நோக்­கம் என்றாரவர்.

இத­னி­டையே, நேற்று மெய்­நிகர் கலந்­து­ரை­யா­டல் ஒன்­றில் கலந்­து­கொண்ட சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி அத­னை­யொட்டி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

தமது அமைச்சு 2021ஆம் ஆண்டை எஸ்ஜி மாதர் கொண்­டாட்ட ஆண்­டா­கப் பிர­க­ட­னப்­படுத்தி இருப்­ப­தா­க அப்­போது அவர்0 தெரி­வித்­தார்.

"சமூ­கத்­தில் பல­வி­த­மான பொறுப்­பு­களை ஏற்று தொண்­டாற்றி வரும் மாதரை நாம் போற்றி கொண்­டா­டு­வோம். அதோடு, மாதரின் முன்­னேற்­றத்­துக்கு ஆத­ரவு அளிக்­கும் ஆட­வர்­க­ளை­யும் கொண்­டா­டு­வோம்," என அமைச்­சர் கூறினார்.

சிங்­கப்­பூ­ரில் பெண்­களைப் பாதிக்­கக்­கூ­டிய அம்­சங்­களை மறு­ப­ரி­சீ­லனை செய்­யப்­போ­வ­தாக அர­சு சென்ற ஆண்டு அறி­வித்­தது. அந்த மறு­ப­ரி­சீ­ல­னை­யின் முக்­கிய அங்­க­மாக கலந்­து­ரை­யா­டல் கூட்­டத்தொடருக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்டு உள்­ளது.

'சிங்­கப்­பூர் மாதர் மேம்­பாட்­டுக் கலந்­து­ரை­யா­டல்' என்று குறிப்­பிடப்­படும் அந்­தத் தொடர் சென்ற ஆண்டு செப்­டம்­ப­ரில் தொடங்­கி­யது. அதன்மூலம் திரட்­டப்­படும் தக­வல்­கள், யோச­னை­கள் எல்­லாம் ஒரு வெள்ளை அறிக்­கை­யாக நாடா­ளு­மன்­றத்­தில் இந்த ஆண்டு பிற்­ப­கு­தி­யில் தாக்­கல் செய்யப்படும்.

சிங்­கப்­பூ­ரில் மாதர்­ தொடர்ந்து முன்­னேற்­றம் காண்­பதற்­கான பரிந்­து­ரை­கள் அந்த வெள்ளை அறிக்­கை­யில் இடம்­பெற்று இருக்­கும்.

கலந்­து­ரை­யா­டல் தொட­ரும் வெள்ளை அறிக்­கை­யும் இங்கு மாதர்­ மேலும் முன்­னேற்­றம் காண்­ப­தற்­காக தீர்­வு­களை உரு­வாக்கி அவற்றை நடை­மு­றைப்­படுத்த உத­வும் என்று திரு மசகோஸ் குறிப்­பிட்­டார்.

இந்த ஆண்டு முழு­வ­தும் எஸ்ஜி மாதர் இயக்­கத்­தின் பகுதி­யாக பல கொண்­டாட்­டங்­க­ளுக்­கும் நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் அமைச்சு ஏற்­பாடு செய்­யும்.