சுவாரசிய வேலைக்கான தேடல் புதிய பட்டதாரிகளுக்கும் நடுத்தர வயதினருக்கும் இருக்கலாம்.
செய்தித் துறையில் பணியாற்றும் அனுபவம் வழக்கமான அலுவலக வேலையைக் காட்டிலும் மாறுபட்டது.
ஒரு செய்தியாளராக சமூகத்தின் எல்லா நிலைகளிலும் உள்ளோரை சந்தித்து, பேட்டி கண்டு, எழுத்து வழி எளிய முறையில் தகவல்களையும் செய்திகளையும் படைக்கும் பணிக்குத் துடிப்பு
மிக்கவர்களைத் தேடுகிறோம்.
எஸ்ஜி ஒற்றுமை வேலைப் பயிற்சி திட்டத்தின் கீழ் (SGUnited Traineeships Programme), தமிழ் முரசு நாளிதழுடன் பயிற்சி செய்தியாளர் வேலை வாய்ப்புகளுக்கு நீங்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
தமிழ், ஆங்கில மொழிகளில் நல்ல மொழி வளம் கொண்டவர்கள், இந்திய சமூகத்தின் நடப்பு விவகாரங்களில் ஆர்வம் உடையவர்கள் இப்பயிற்சிக்குப் பொருத்தமாக இருப்பர்.
செய்திக்குத் தேவையான தகவல்களை விடாமுயற்சியுடன் தேடி, நேரத்துடன் செய்திகளை எழுதித் தர வேண்டும்.
சொந்த காணொளிகளை தயாரிக்கவும் மின்னிலக்கத் தளங்களில் செய்திகளைப் பதிவேற்றம் செய்யவும் வாய்ப்பு கிடைக்கும்.
சில முக்கிய நிகழ்வுகள் வார
இறுதி நாட்களில் இடம்பெறுவதால், சனிக்கிழமை அல்லது ஞாயிறு அன்று பணியாற்றுவதாக இருக்கும்.
வாரத்தில் ஐந்து நாட்கள் பணியாற்றும் அட்டவணை உங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.
துறை சார்ந்த சந்தை நிலவரத்திற்கு ஏற்ற மாதச் சம்பளம் உங்களுக்கு வழங்கப்படும்.
சமூகத்தின் குரலாக நீங்கள் விளங்க விரும்பினால், 'Application for Trainee Journalist' என்ற தலைப்புடன் உங்கள் தனிப்பட்ட விவரங்களை (CV/resume) tamilmurasu@sph.com.sg என்ற இணைய முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
https://www.mycareersfuture.gov.sg/ போன்ற வேலை தேடும் தளங்களிலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

