விதி மீறல்: 42 நிறுவனங்களுக்கு அபராதம்

விதி மீறல்: 42 நிறுவனங்களுக்கு அபராதம்

2 mins read
430dea97-f192-437d-a88f-b6d4a21a8f17
மனிதவள அமைச்சின் அதிகாரிகள், வேலையிடங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை எவ்வாறு சிறந்த முறையில் கையாள வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகளை சென்ற ஆண்டு அலுவலகம் ஒன்றில் வழங்கினர். படம்: மனிதவள அமைச்சு -

கொவிட்-19 கட்டுப்பாடுகள் தொடர்பில் 5,380 வேலை இடங்களில் அமைச்சு சோதனை; பல முறை எச்சரிக்கைக்குப் பிறகு நடவடிக்கை

வீடு­களில் இருந்து வேலை பார்ப்­பதை இப்­போ­தைக்கு நிரந்­த­ர­மாக்­கும்­ப­டி­யும் அலு­வ­ல­கத்­தில் பாது­காப்­பான இடை­வெ­ளியை உறு­திப்­ப­டுத்­தும்­ப­டி­யும் திரும்­பத் திரும்ப கோரிக்கை விடுக்­கப்­பட்­டா­லும் வேலை­யிடப் பாது­காப்பு நிபந்­த­னை­களை மதித்து நடக்க மேலும் பல நிறு­வ­னங்­கள் தவ­றி­விட்­டன.

அந்த நிறு­வ­னங்­க­ளுக்குத் தண்­டனை விதிக்­கப்­பட்டு இருக்­கிறது. சென்ற ஆண்டு செப்­டம்­பர் 28 முதல் இந்த ஆண்டு ஜன­வரி 15 வரை இத்­த­கைய குறை­பா­டு­க­ளுக்­காக சுமார் 42 முத­லா­ளி­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்டு இருக்­கிறது என்று மனி­த­வள அமைச்சு தெரி­வித்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்டு உள்­ளது.

வீடு­களில் இருந்தே வேலை பார்க்க முடி­யும் என்­றா­லும் அலு­வ­ல­கத்­துக்கு வரும்­படி ஊழி­யர்­களை நிறு­வ­னங்­கள் கேட்­டுக்­கொண்­ட­தும் வேலை­யி­டங்­களில் பொது­வான பகு­தி­களில் பாது­காப்பு இடை­வெளி அடை­யா­ளங்­க­ளைத் தெள்­ளத்­தெ­ளி­வா­கக் குறிப்­பிட தவ­றி­ய­தும் பொது­வான விதி­மீறல்­களாக இருந்­தன.

இந்த அமைச்சு, 5,380 வேலை­இடங்­க­ளைப் பரி­சோ­தனை செய்­தது. அதற்­குப் பிறகு 42 நிறு­வ­னங்­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

அமைச்சு சென்ற ஆண்டு ஜூன் மாதம் தலா $1,000 வீதம் 52 முத­லா­ளி­க­ளுக்கு அப­ரா­தம் விதித்­தது. குறை­பா­டு­கள் காணப்­பட்­ட­தற்­காக ஏழு வேலை­யி­டங்­கள் மூடப்­பட்­டன. அத­னை­ய­டுத்து இப்­போது மேலும் பல நிறு­வ­னங்­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்டு உள்­ளன.

விடு­முறை காலத்தைக் கருத்­தில்கொண்டு போக்­கு­வ­ரத்து மற்­றும் சேமிப்புக் கிடங்கு துறையை இலக்­காக வைத்து கடந்த டிசம்­பரில் அமைச்சு ஒரு செயல்­திட்­டத்­தைத் தொடங்­கி­யது.

அலு­வ­ல­கத்­திற்கு வந்து வேலை பார்க்­கும் ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்­கைக்கு வரம்பு விதிப்­பது உள்ளிட்ட வேலை­யிடப் பாது­காப்பு கட்­டுப்­பாடு­ கள், சென்ற ஆண்டு ஜூன் மாதம் முடி­ந்த­போது நடப்­புக்கு வந்­தன.

அவை செப்­டம்­பர் 28ஆம் தேதி கொஞ்­சம் தளர்த்­தப்­பட்­டன. மேலும் பலர் வேலை­யி­டத்­திற்குத் திரும்ப அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். இருந்­தா­லும் அலு­வ­ல­கங்­களில் கொவிட்-19 பர­வ­லைத் தடுப்­ப­தற்கு ஏது­வாக வீட்­டி­லி­ருந்து வேலை பார்க்­கும் நடை­மு­றையே தொடர வேண்­டும் என்று சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்மேளனமும் தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சும் மனி­த­வள அமைச்­சும் சென்ற மாதம் தெரி­வித்­தன.

இத­னி­டையே, ஊழி­யர்­கள் தொலை­தூ­ரத்­தில் இருந்து வேலை பார்க்­கும் நடை­மு­றைக்­குத் தாங்­கள் பழக்­கப்­பட்­டு­விட்­ட­தாக பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள் கூறு­கின்­றன.

இருந்­தா­லும் இத்­த­கைய ஏற்­பாடு­கள் கொவிட்-19க்குப் பிறகு எந்த அள­வுக்­குத் தொடர வேண்­டும் என்­ப­தைப் பொறுத்­த­வ­ரை­ சில நிறு­வ­னங்­கள் வேறு­பட்ட கருத்­து­களைக் கொண்டுள்ளன.

ஊழி­யர்­க­ளுக்கு நீக்­குப்­போக்கை அளிக்­கக்­கூ­டிய ஏற்­பாட்டு முறை நடப்­புக்கு வர­லாம் என்று பெரும்­பா­லானவர்கள் யோசனை கூறினர்.