ரேசர் தலைமையகத்தில் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு

விளையாட்டுக் காணொளிகளுக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமான ரேசர் ஏறத்தாழ 1,000 பேரை வேலையில் அமர்த்தவிருக்கிறது.

இவர்கள் ரேசர் நிறுவனத்தின் புதிய சிங்கப்பூர் அலுவலகத்தில் பணிபுரிவர்.

ஒன்-நார்த் தொழில்நுட்ப வர்த்தகப் பூங்காவில் அமைந்துள்ள இந்த தலைமையகம் ரேசர் நிறுவனத்தில் தென்கிழக்காசிய தலைமையகமாகும். அதன் திறப்பு விழா இரண்டாம் காலாண்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏறத்தாழ 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக ரேசர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு டான் மில் லியாங் இன்று காலை தெரிவித்தார்.

ஆனால் வேலைகள் குறித்து மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அவை ஒப்பந்த அடிப்படையிலா அல்லது தற்காலிகமானவையா அல்லது நிரந்தர வேலைகளா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

எப்போது வேலையில் ஆட்கள் அமர்த்தப்படுவர் என்பது குறித்தும் தகவல் தெரிவிக்க ரேசர் நிறுவனம் மறுத்துவிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!