புதிய நியமன உறுப்பினர்கள் நேற்று பதவியேற்பு

புதிய நியமன உறுப்பினர்கள் நேற்று பதவியேற்பு

1 mins read
a6f13467-a4b8-47cb-9ead-accfaf8698b1
நேற்று பதவியேற்றுக்கொண்ட ஒன்பது பேரும் முதல்முறை நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

புதி­தா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள ஒன்­பது நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நேற்று நாடா­ளு­மன்ற நாய­கர் முன்­னி­லை­யில் பதவிப் பிர­மா­ணம் எடுத்­துக்­கொண்­ட­னர்.

எஸ்பி குழு­மத்­தின் தலை­மைத் தொழில்­நுட்ப அதி­காரி திரு அப்­துல் சமாத் அப்­துல் வஹாம், சிஸ்­டிக் நிறு­வ­னத்­தின் தலை­வர் திரு­வாட்டி ஜெனட் ஆங், குளோ­பல் எக்ஸ்­போர்ட்ஸ் சம்­மே­ள­னத்­தின் செய­லக இயக்­கு­நர் திரு மார்க் சே, குவோ­கோ­லாண்ட் குழு­மத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் திரு செங் சிங் யாவ், சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கப் பொரு­ளி­யல் பள்ளி­யின் துறைத் தலை­வர் பேரா­சி­ரி­யர் ஹூன் ஹியான் டெக், சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பழ­மைப் பாது­காப்பு அறி­வி­யல் நிபு­ணர் பேரா­சி­ரி­யர் கோ லியான் பின், வழக்­க­றி­ஞர் திரு ராஜ் ஜோஷுவா தாமஸ், கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னை­யின் பல்­சீ­ர­மைப்­புத் துறைப் பதி­வா­ளர் டாக்­டர் ஷஹிரா அப்­துல்லா, தாம்­சன் மார்­ப­கச் சிகிச்சை நிலை­யத்­தின் அறுவை சிகிச்சை நிபு­ணர் டாக்­டர் டான் இயா சுவாம் ஆகியோரே அந்தப் புதிய நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள்.