உற்பத்தித்துறையை மேலும் வளர்க்க அரசு பெரு முயற்சி

அமைச்சர்: முன்னணி முதலீட்டாளர்களைக் கவர்ந்து இலக்கை நிறைவேற்ற திட்டம்

சிங்­கப்­பூர், உல­கின் தலை­சி­றந்த முன்­னணி நிறு­வனங்க­ளைக் கவர்ந்து ஈர்த்து அவை இங்கு செயல்­ப­டு­மாறு செய்து அதன் மூலம் தனது வலு­வான உற்­பத்­தித் துறையை மேலும் வளர்க்க செயல்­பட்டு வரு­கிறது.

உற்­பத்­தித் தொழில்­துறை சிங்­கப்­பூர் பொரு­ளி­ய­லின் மிக முக்­கிய தூணாக தொடர்ந்து இருந்துவரும் என்­ப­தால் அந்­தத் துறை­யின் இப்­போ­தைய ஆற்­றலை மேலும் பலப்­படுத்த அர­சாங்­கம் விரும்­பு­கிறது என்று வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­தார்.

உயிர்மருத்­துவ அறி­வி­யல், வேளாண் தொழில்­நுட்­பம், நகர போக்குவரத்து, பொரு­ளி­யல் வளத்­துடன் இயற்கை வளத்­தை­யும் கட்டிக்­காப்­பது போன்ற துறை­கள் வளர்ச்சி கண்டு வரு­கின்­றன.

சிங்­கப்­பூர் உற்­பத்­தித் துறை­யின் அள­வை­யும் ஆற்­ற­லை­யும் இந்­தத் துறை­களில் விரி­வு­ப­டுத்த அர­சாங்­கம் முயல்­கிறது என்றார் அவர்.

‘இல்லு­மி­னியா’ என்ற உயி­ரி­யல் தொழில்­நுட்ப நிறு­வ­னத்­துக்கு அமைச்­சர் வரு­கை­ய­ளித்­தார். அதற்­குப் பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய திரு சான், இந்­தப் புதிய துறை­களில் மேலும் பல முன்­னணி நிறு­வ­னங்­கள் இங்கு தளம் கொண்டு செயல்­படும் என்­ப­தால் சிங்­கப்­பூரர்­களுக்கு நல்ல வேலை வாய்ப்­பு­கள் அதி­க­மாகக் கிடைக்­கும் என்றார்.

இத­னால் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் உட்­பட முழு­மை­யான பலன் ஏற்­படும் என்­று அமைச்சர் கூறினார்.

அடுத்த தலை­முறை உற்­பத்­தித் துறை ஆலை­களில் அசுத்த மான வேலைச் சூழல் இருக்­காது. அந்த ஆலை­கள் ஆபத்­தா­ன­வை­யா­க­வும் சலிப்­பூட்­டு­ப­வை­யா­க­வும் இருக்­கமாட்டா என்­பதை திரு சான் சுட்­டி­னார்.

சிங்­கப்­பூர் முன்­னே­றிய உற்­பத்­தித்­துறை மையமாகத் திகழ, தேவைப்­படக்கூடிய முக்கியமான மூன்று உத்­தி­க­ளை­யும் திரு சான் கோடி­காட்­டி­னார்.

உள்­கட்­ட­மைப்­பில் முத­லீடு செய்­வது, வலு­வான ஆய்வுவள ஏற்­பாட்டை பலப்­ப­டுத்­து­வது, தொழில்­துறை உரு­மாற்ற திட்­டங்­களில் நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ரவு அளிப்­பது ஆகி­யவை அந்த உத்தி­கள் என்று அவர் குறிப்பிட்டார்.

உற்­பத்­தித்­து­றையை 2030ஆம் ஆண்டு வாக்­கில் 50 விழுக்­காடு வளர்ப்­பது சிங்­கப்­பூ­ரின் புதிய 10 ஆண்டு திட்­ட­மாக இருக்­கிறது. இந்­தத் திட்­டம் பற்றி கடந்த ஜன­வ­ரி­ மாதத்தில் அறி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!