விபத்துகள்: போதையில் வாகனம் ஓட்டியதாக இரண்டு பேர் கைது

மத்­திய விரை­வுச்­சா­லை­யில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை நேரத்­தில் தனித்­த­னி­யாக இரண்டு சாலை விபத்­து­கள் நிகழ்ந்­தன.

அவற்­றின் தொடர்­பில் குடித்து­விட்டு வாக­னம் ஓட்டி இருக்­கிறார்­கள் என்ற சந்­தே­கத்­தின் பேரில் இரண்டு பேரை போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

முத­லா­வது விபத்­தில் இரண்டு கார்­கள் சம்­பந்­தப்­பட்டு இருந்­தன. அதை அதி­கா­ரி­கள் கையாண்­டு கொண்டு இருந்­த­போது மோட்­டார்­சைக்­கிள் சம்­பந்­தப்­பட்ட இரண்­டா­வது விபத்து நிகழ்ந்­தது. 27 வயது கார் ஓட்­டு­நர் ஒரு­வ­ரும் மோட்­டார்­சைக்­கிளை ஓட்­டி­வந்த 29 வயது ஆட­வ­ரும் கைதா­ன தாக அதிகாரிகள் கூறினர்.

இந்­தச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­த­போது அந்­தச் சாலைப் பகுதி வழி­யாக கிராப் நிறு­வன வாகன ஓட்டு­நர் ஒரு­வர் வாகனத்தை ஓட்டிச் சென்­று­கொண்டு இருந்­தார். அவருடைய வாக­னத்­தில் இருந்த படச்­சா­த­னம் விபத்­து­க­ளைப் படம் எடுத்­தது.

அந்­தக் காணொளி ‘எஸ்ஜி ரோடு வெஜி­லன்ஸ்’ என்ற ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­வேற்­றப்­பட்­டது. வேக­மாக வந்த ஒரு சிவப்பு நிற கார், முன்னே சென்று­கொண்டு இருந்த நீல நிற கார் மீது மோதி­யது.

அதனால் நீல நிற கார் தலை குப்­புற கவிழ்ந்­தது. காரின் உடைந்த பகு­தி­கள் சாலை­யின் ஐந்து தடங்­க­ளி­லும் சிதறி விழுந்­தன. திரு லிம் என்ற அந்த கிராப் வாகன ஓட்டு­நர் விபத்து பற்றி போலி­சி­டம் தெரி­வித்­தார்.

வேக­மாக வந்த சிவப்பு நிற காரை ஓட்டி வந்­த­வர் அவரே வாகனத்­தில் இருந்து வெளி­யேறி­விட்­ட­தாக அந்த வாகன ஓட்­டு­நர் தெரி­வித்­தார்.

நீல நிற காரை ஓட்டி வந்­த­வரும் அதிலிருந்த பய­ணி­யும் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டுசெல்­லப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!