ஒருமுறை நுழைவுப் பதிவு செய்யும் வசதி நடப்புக்கு வரும்

ஒரு கடைத்­தொ­கு­தி­யில் ‘சேஃப் என்ட்ரி’ மூலம் நுழை­வுப் பதிவு செய்­யும் வாடிக்­கை­யா­ளர்­கள் அத்­தொ­கு­தி­யில் உள்ள கடை­க­ளுக்­குச் செல்­லும்­போது அங்­கும் சேஃப்என்ட்ரி பதிவு செய்ய வேண்­டி­ய­தில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

‘டிரேஸ்­டு­கெ­தர்’ செயலி அல்­லது கருவி மூலம் கட்­டா­ய­மாக நுழை­வுப் பதிவு இடம்­பெற வேண்­டும் என்ற விதி­முறை நடப்­புக்கு வரும்­போது இந்­தப் புதிய நடை­முறை அமல்­ப­டுத்­தப்­படும்.

உதா­ர­ணத்­துக்கு தற்­போது, பல வரு­கை­யா­ளர்­க­ளைக் கொண்ட பொது இடங்­கள், கொவிட்-19 சம்­ப­வங்­கள் அதி­கம் நிகழ்ந்­துள்ள கடைத் தொகு­தி­கள், உண­வ­கங்­கள், வேலை­யி­டங்­கள் ஆகி­ய­வற்­றுக்­குச் செல்­வோர் சேஃப்என்ட்ரி அல்­லது டிரேஸ்­டு­கெ­தர் செயலி அல்­லது கருவி மூலம் நுழைவு பதிவு செய்­யப்­ப­டு­கிறது.

இது கொரோனா கிரு­மித்­தொற்று தொடர்­பி­லான தொடர்பு தட­ம­றி­த­லுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும்.

வாச­லில் நுழை­வைப் பதிவு செய்த பிறகு, வாடிக்­கை­யா­ளர்­கள் கடைத்­தொ­கு­தி­யில் செல்­லும் ஒவ்­வோர் இடத்­தி­லும் நுழை­வைப் பதிவு செய்ய வேண்­டும். ஆனால் இப்­போது டிரேஸ்­டு­கெ­தர் மூலம் நுழை­வைப் பதிவு செய்­வது கட்­டா­ய­மல்ல என்று கூறப்­பட்­டுள்­ளது.

இதன் தொடர்­பில் அல்­ஜு­னிட் குழுத் தொகுதி உறுப்­பி­னர் லியோன் பெரேரா கேட்ட கேள்­விக்கு எழுத்­து­பூர்வ பதில் அளித்த மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன், “பொது இடங்­களில் டிரேஸ்­டு­கெ­தர் மூலம் மட்­டும் நுழை­வைப் பதிவு செய்­யும் முறை அமல்­ப­டுத்­தப்­பட்ட பிறகு, தற்­போது நடப்­பில் உள்ள ஒவ்­வோர் இடத்­தி­லும் உள்ள சேஃப்என்ட்ரி நுழை­வுப் பதிவு முறை சில இடங்­களில் அகற்­றப்­படும்.

“அதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன. நீங்கள் டிரேஸ்­டு­கெ­தர் மூலம் மட்­டும் கொண்ட நுழைவைப் பதிவு செய்து பிறகு, கிருமித்தொற்று அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்லும்போதும் அங்கும் வாடிக்கையாளர்கள் டிரேஸ்­டு­கெதர் மூலம் வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.

“அங்­குள்­ள­வர்­கள் அதிக நேரத்­துக்கு மிக அரு­கில் இருக்­கக்­கூடும் அல்­லது ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய கார­ணங்­க­ளுக்­கான அதா­வது உடற்­ப­யிற்­சிக் கூடத்­தில் பயிற்­சி­யில் ஈடு­ப­டும்­போது அல்­லது உணவு, பானக் கடை­யில் உண்­ணும்­போது அவர்­கள் முகக்கவ­சத்தை அகற்­றி­யி­ருக்­கக்­கூ­டும் என்­பதே அதற்­கான கார­ணம்,” என்று கூறி­னார் தேசிய பாது­காப்­புக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான திரு டியோ.

இப்­போது மக்­கள் தொகை­யில் 80 விழுக்­காட்­டி­ன­ருக்கு மேற்­பட்­டோர் டிரேஸ்­டு­கெ­தர் செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்­துள்­ள­னர் அல்­லது அதன் கரு­வி­யைப் பெற்­றுள்­ள­னர்.

டிரேஸ்­டு­கெ­தர் மூலம் மட்­டும் நுழை­வைப் பதிவு செய்­யும் முறை அமல்­ப­டுத்­தப்­பட்­ட­வு­டன் மக்­கள் தங்­கள் திறன்­பேசி மூலம் ‘க்யூ­ஆர்’ குறி­யீட்டை ஸ்கேன் செய்­தல், சிங்­பாஸ் மூலம் திறன்­பேசி செயலி, தங்­கள் அடை­யாள அட்­டை­யில் உள்ள பார்­கோட் குறி­யீடு ஆகி­ய­வற்­றின் மூலம் தங்­கள் வரு­கையை பதிவு செய்ய முடி­யாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!