'சிங்கப்பூரர்களை கொவிட்-19 கொள்ளைநோய் மேலும் ஆழமாக சிந்திக்க வைத்துள்ளது'

'சிங்கப்பூரர்களை கொவிட்-19 கொள்ளைநோய் மேலும் ஆழமாக சிந்திக்க வைத்துள்ளது'

2 mins read
28bad138-3b5a-4fb6-a8d1-a41bf533d68e
விருது பெற்றவர்களுடன் அதிபர் ஹலிமா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஒரு­வ­ரின் செய­லால் பிற­ருக்கு எத்­த­கைய பாதிப்­பு­கள் ஏற்­படும் என்­பதை கொவிட்-19 கொள்­ளை­நோய் சிங்­கப்­பூ­ரர்­களை மேலும் ஆழ­மா­கச் சிந்­திக்­கத் தூண்­டி­யுள்ளதாக அதி­பர் ஹலிமா யாக்­கோப் தெரி­வித்­துள்­ளார். கிரு­மிச் சூழல் சிங்­கப்­பூ­ரர்­க­ளைப் பல வழி­களில் மாற்­றி­யுள்­ள­தா­க­வும் தின­மும் முகக்­க­வ­சம் அணி­வது, பிறர் மீது பரிவு, அன்பு காட்­டும் வழக்­கத்தை மக்­க­ளி­டையே ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக கூறி­னார்.

"குறிப்­பாக வச­தி­கு­றைந்­த­வர்­களி­டம் சிங்­கப்­பூ­ரர்­கள் நடந்­து­கொண்ட விதம், உள்­ளத்தை நெகிழ வைக்­கும் ஒன்று. இந்­தக் கொள்­ளை­நோ­யு­டன் அன்பு, பெருந்­தன்மை, பரிவு ஆகி­ய­வை­யும் பரவி­உள்­ளன," என்று நேற்று நடை­பெற்ற 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் 2020ஆம் ஆண்­டின் உன்­னத சிங்­கப்­பூ­ரர் விருது' நிகழ்ச்­சி­யில் அவர் கூறி­னார். சென்ற ஆண்­டின் தர­வு­களின் மூலம் உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு மேலும் அதி­க­மா­னோர் நன்­கொடை அளித்­துள்­ள­னர் என்­றும் தொண்­டூ­ழி­யர்­க­ளின் எண்­ணிக்கை அதி­கரித்­துள்­ளது என்­றும் தெரிய வந்­துள்­ளது.

"நம் சொந்த கடப்­பா­டு­கள், தேவை­களை மீறி பிற­ரைப் பற்றி எண்ண வேண்­டும் என்ற சிந்­தனை பல சிங்­கப்­பூ­ரர்­க­ளின் ஆழ்­ம­ன­தில் வேரூன்றி உள்­ளதை உணர முடி­கிறது," என்­றார் திரு­வாட்டி ஹலிமா. இதே­போன்ற ஒரு­மைப்­பாட்டை அனைத்து நாடு­களும் கடைப்­பி­டிக்­க­வில்லை என்று அவர் சுட்­டி­னார். 2020ஆம் ஆண்டு சவால்­மிக்க ஒன்­றாக இருந்­த­தால் இந்த விருது நிகழ்வு மேலும் அர்த்­தம் நிறைந்­த­தா­கிறது என்­றார்.

"நம் பொரு­ளி­ய­லும் நம் வாழ்க்­கை­யும் பாதிக்­கப்­பட்­டது. நிலை­யானது என்று எண்­ணிக் கடைப்­பி­டித்­தவை அனைத்­தை­யும் பெரு­ம­ள­வில் மாற்­றம் செய்து வாழ வேண்­டிய நிலைக்­குத் தள்­ளப்­பட்­டோம்," என்­றார் அவர்.

"நம் ஒவ்­வொ­ரு­வ­ரின் செயல்­களும் நடத்­தை­யும் மற்­ற­வர்­க­ளின் நல­னைப் பாதிப்­பது குறித்து நாம் தற்­போது மேலும் ஆழ­மா­கச் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது," என்­றார்.

விருது பெற்ற எண்­ம­ரைப் பாராட்டி, மேம்­பட்ட சமூ­கத்தை உரு­வாக்க பாடு­படும் நபர்­களை இவ்­வி­ருது அடை­யா­ளம் காண்­ப­தாக அதிபர் ஹலிமா குறிப்­பிட்­டார்.