உலகிலேயே பாராட்டுதலுக்குரிய சிறந்த 50 நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) இடம்பெற்றுள்ளது. அமெரிக்க வர்த்தக சஞ்சிகை 'ஃபார்ச்சுன்' வெளியிட்ட இப்பட்டியலில் எஸ்ஐஏ 34வது இடத்தில் உள்ளது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தென்கிழக்காசிய நிறுவனமும் இதுவே. பட்டியலில் எஸ்ஐஏ நிறுவனத்தைச் சேர்த்து மூன்று ஆசிய நிறுவனங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. முதல் மூன்று இடங்களில் 'ஆப்பிள்', 'அமேஸான்', 'மைக்ரோசொஃப்ட்' நிறுவனங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 3,800 மூத்த நிர்வாகிகள், இயக்குநர்கள், துறை ஆய்வாளர்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்ட வருடாந்திர கணக்கெடுப்பில் இப்பட்டியல் முடிவானது. சென்ற ஆண்டு பட்டியலில் எஸ்ஐஏ 28வது இடத்தைப் பிடித்தது. 2019ல் 18வது இடத்தில் இருந்தது.

