அனுகூலங்களைத் தரும் மின் கட்டண முறை

மின்னிலக்கமயமாக்கல் முயற்சிகள் உணவங்காடி கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தியுள்ளன. மின்னிலக்க முறைக்கு மாறியதன்மூலம் ஏற்பட்டுள்ள அனுகூலங்கள் குறித்து உணவங்காடியில் கடை வைத்திருக்கும் ஹாஜா முகம்மது, ஷா மக்தூம் இருவரும் இங்கே விவரிக்கின்றனர்.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக தோ பாயோ, லோரோங் 8ல் பரோட்டா கடை நடத்தி வரும் 63 வயது திரு ஹாஜா முகம்மது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் மின்-கட்டண முறைக்கு மாறினார்.


நெட்ஸ், கிராப் பே போன்றவற்றைப் பயன்படுத்துவது தமக்கு மட்டுமின்றி, தமது வாடிக்கையாளர்களுக்கும் எளிதாகவும் வசதியாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.


“ரொட்டி போட்ட எண்ணெய்க் கையோடு பணத்தை வாங்குவதும் சில்லறை கொடுப்பதும் சிரமமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் கையைத் துடைத்து விட்டு பணம் வாங்க வேண்டும். அதுக்கு கொஞ்ச நேரம் ஆகும். இப்போது வசதியாக இருக்கிறது,” என்ற திரு ஹாஜா முதலில் மின் கட்டணச் சேவை இவ்வளவு வசதியானது என நினைக்கவில்லை.


மின்னிலக்க கட்டண முறை பற்றி விளக்கும் எஸ்ஜி மின்னிலக்க அலுவலகத்தின் மின்னிலக்கத் தூதர்கள் முதலில் இவரிடம் அது குறித்து விளக்கியபோது, இவர் தமக்கு இது வேண்டாம் என்றே கூறினார்.தந்தையிடம் 14 வயதில் இந்தத் தொழிலைக் கற்று, அப்போதிலிருந்து இதே வேலையைச் செய்து வரும் திரு ஹாஜா, தோ பாயோ, லோரோங் 8இல் உள்ள ஈரச்சந்தை, உணவங்காடியில் உள்ள தமது கடையை காலை 5 மணியிலிருந்து பகல் 12 மணி வரைதான் திறந்து வைத்திருக்கிறார். இவர் ரொட்டி போடுவார். ஓர் உதவியாளர் இருக்கிறார்.


“ஒரு மாதம் கழித்து மீண்டும் அவர்கள் இதனால் ஏற்படும் வசதிகளைப் பற்றி விளக்கியபோது, மாறிப் பார்க்கலாமே என்று சரி என்று சொன்னேன்,” என்றார் அவர். உணவங்காடியில் ஃவைஃபை சேவை இருப்பதால், நெட்ஸ் இயந்திரத்திற்கு இணைய இணைப்புக் கொடுக்க கூடுதல் வசதிகளைச் செய்ய வேண்டி இருக்கவில்லை. அதோடு, கைபேசி செயலிகளைப் பயன்படுத்துவதும் வசதியாக இருக்கிறது. இவர் கொவிட்-19 கிருமிப் பரவல் கட்டுப்பாட்டுக் காலத்துக்கு முன்னரே மின்-கட்டண சேவைக்கு மாறிவிட்டதால், இவருக்கு வசதியாக இருந்தது.


“WHY-Q என்ற சேவை, இந்த வட்டாரத்திலுள்ளவர்கள் வீட்டுக்கே உணவு வரவழைக்க உதவுகிறது.கொவிட் சூழலில் வியாபாரம் மிக மோசமாகி விட்டாலும் அரசாங்க உதவியும் இந்த வீட்டுக்கு உணவு வழங்கும் சேவையும் உதவியது என்றார் அவர்.திரு ஹாஜாவின் வாடிக்கையாளர்களில் 15-20% விழுக்காட்டினர் மின்-கட்டண சேவையைப் பயன்படுத்துகின்றனர்.


இவர் கடையில் அன்றாடம் 20க்கும் மேற்பட்டவர்க்ள மின்-கட்டணச் சேவையைப் பயன்படுத்துகிறார்கள். அதனால் அரசாங்கம் வழங்கும் மின்-கட்டண போனசுக்கு இவர் தகுதிபெற்றுள்ளார். ஐந்து மாத காலத்துக்கு மாதந்தோறும் இவருக்கு $300 ஊக்கத்தொகை கிடைக்கும்.
“மூன்று ஆண்டுகளுக்கு இந்தச் சேவைகள் இலவசம். மேலும் கட்டண ரசீதுக்கான தாள், இயந்திர பழுதுபார்ப்பு எல்லாமே இலவசம்,” என்ற அவர் அதன் பிறகு, சிறிதளவு கட்டணம் இருந்தாலும் இந்தச் சேவையைத் தொடரப் போவதாகக் கூறினார்.


வாடிக்கையாளர்கைளயும் தமது கடைக்கார நண்பர்களையும் மின்னிலக்கச் சேவைக்கு மாற பரிந்துரைக்கும் திரு ஹாஜா, “இது மிகவும் எளிதாக, வசதியாக இருக்கும். பணம் நேரடியாக வங்கிக்குச் சென்றுவிடும். கணக்கு 100% சரியாக இருக்கும். காசுகூடக் குறையுமோ, யாராவது திருடுவார்களோ என்று எதற்கும் பயப்படத் தேவையில்லை. கணக்கு வழக்கும் சரியாக இருக்கும்,” என்று கூறினார்.

மின்னிலக்கக் கட்டணம் காலத்தின் அவசியம்

கடந்த 32 ஆண்டுளாக இந்த இறைச்சி வியாபாரம் செய்து 52 வரும் ஷா மக்தூம் கடந்த ஆறு மாதங்களாக மின்கட்டண முறையைப் பயன்படுத்துபவர்.
ஏறக்குறைய 12 வருடங்களாக சொங்பாங் ஈரச் சந்தையில் இறைச்சி, கோழிக் கடைகள், காய்கறிக் கடை என மூன்று கடைகளை நிர்வகித்து வரும் இவர், முன்னரே ‘பேநவ்’ மூலம் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைக்குப் பழக்கப்பட்டிருந்தார். மின்னிலக்கக் கட்டணமுறை அறிமுகமானதுமே அதனைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்.


“இந்த கொவிட் சூழலில் மின்னலக்கக் கட்டண முறை கிருமி பரவலைத் தடுக்கும். ஏற்கெனவே பேநவ் முறையை செயல்படுத்தி வந்ததால் இந்த கியூஆர் குறியீடு வருடும் முறை எளிமையானதாக, பயன் நிறைந்ததாக அமைந்தது. நாங்கள் மேற்கொண்ட ஆரம்ப முயற்சியின் மிக எளிமை வடிவமாக இது உள்ளது. தற்போது மாதம் 20க்கும் கூடுதலான வாடிக்கையாளர்கள் குறியீட்டை வருடி கட்டணம் செலுத்துவதால் $300 மின்-கட்டண ஊக்கத்தொகை 6 மாதங்களுக்கு எனக்கு கிடைத்தது,” என்றார் அவர்.


“அதனுடன், மின் பரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்தும் வர்த்தகர்களுக்கு வாராந்திர அதிர்ஷ்டக்குலுக்கலில் வெற்றியாளருக்கு $4,888 ரொக்கப் பரிசும் கிடைத்தது. இந்த முயற்சிகள் மின்னிலக்க பரிவர்த்தனையை வர்த்தகர்களுக்கிடையே ஊக்குவிக்க நடத்தப்பட்டது,” என்று அவர் விவரித்தார். தந்தை திரு அப்துல் ரஷீத் 1970களில் தொடங்கிய இறைச்சி வியாபாரத்தை 20 வயதில் பொறுப்பேற்றுக்கொண்ட திரு ஷா, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப வியாபார முறைகளையும் மாற்றி அமைப்பது தொழிலைத் தொடரவும் மேம்படவும் அவசியம் எனக் கருதுபவர். கொவிட் பரவல் கட்டுப்பாட்டு காலத்தின்போது ஊழியர்கள் குறைந்திருந்ததால் மின் கட்டண முறை அவருக்கு உதவியாக இருந்ததையும் அவர் சுட்டினார்.


“எனது வாடிக்கையாளர்களில் ஏறக்குறைய 10 விழுக்காட்டினர் குறிப்பாக இளையோர்கள் மின் கட்டண முறையைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் சீனாவில் இருந்த வந்து இங்கு வாழும் நிரந்தரவாசிகள் அதிகம். அவர்கள் இந்த கட்டண செயல்முறையை சீனாவில் அவர்கள் வாழ்ந்த இடங்களில் மிகச் சாதாரணமாக பல வருடங்களாகவே பயன்படுத்தி வந்ததாகவும் சிங்கப்பூர் இதை காலங்கடந்து செயல்படுத்தியுள்ளது என்று கூறியது எனக்கு வியப்பைத் தந்தது,” என்றார் அவர். மின்னிலக்க முறைக்கு மாறியதால், தாம் பெற்ற நன்மைகளையும் பெற்ற ரொக்க ஊக்கத்தொகையையும் பற்றி தமது அண்டை கடைக்காரர்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களையும் மின்னிலக்கக் கட்டண முறையை செயல்படுத்த ஊக்குவித்து வருகிறார் திரு ஷா. தற்போது பலரும் மின்னிலக்க கட்டண முறைக்கு மாறி வருவதை அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!