தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரி செலுத்தாத சிகரெட்டுகள் பறிமுதல்

1 mins read
32503b3d-8b91-43e1-889d-031343335eb7
வேனில் 'நூடல்ஸ்' என்று குறிப்பிடப் பட்ட பெட்டிகளை அதிகாரிகள் சோதனையிட்டதில் உள்ளே சுமார் $196,420 மதிப்பில் வரி செலுத்தப்படாத கள்ள சிகரெட்டுகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். படம்: சிங்கப்பூர் சுங்கத்துறை -

'நூடல்ஸ்' பொட்­ட­லங்­கள் உள்ளே இருப்­ப­தாக பெட்­டி­களில் குறிப்­பிடப்பட்­டி­ருந்­த­போ­தும் அவற்­றில் இருந்­ததோ 2,300 பெட்­டி­கள் நிறைய வரி செலுத்­தாத சிக­ரெட்டு­கள். இவற்­றைக் கொண்­டு­வர முயற்சி செய்த 33 வயது சீன நாட்­ட­வர் ஒரு­வ­ரைக் கைது செய்­துள்­ள­தாக சிங்­கப்­பூர் சுங்­கத்­துறை நேற்று தெரி­வித்­தது. ஆட­வர் ஜன­வரி 29ஆம் தேதி­யன்று துவாஸ் சவுத் ஸ்தி­ரீட் 1க்கும் 3க்கும் இடையே இருந்த சந்து ஒன்­றில் நடந்த அம­லாக்க நட­வ­டிக்­கை­யின்­போது கைதா­னார்.

வேன் ஒன்­றில் கள்ள சிக­ரெட்டு­கள் இருப்­ப­தன் சந்­தே­கத்­தில் சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் வாக­னத்­தைச் சோத­னை­யிட்­ட­போது 'நூடல்ஸ்' என்று குறிக்­கப்­பட்ட பெட்­டி­களில் கள்ள சிக­ரெட்டு­க­ளைக் கண்­டு­பி­டித்­த­னர்.

வரி செலுத்­தாத சிக­ரெட்­டு­களை அடை­யா­ளம் அறி­யப்­ப­டாத வேறொரு ஆட­வ­ரின் உத்­த­ர­வில் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குக் கைதான சீன நாட்­ட­வர் விநி­யோ­கம் செய்­ய­வி­ருந்­த­தாக விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது.

சிக­ரெட்­டு­க­ளுக்­குச் செலுத்த வேண்­டிய வரி சுமார் $196,420 என்­றும் அவற்­றுக்­கான பொருள், சேவை வரி $15,900 என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. இந்­நி­லை­யில் வேனும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.