சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை: அவசர சிகிச்சை அழைப்புகள் குறைந்தன

கடந்த இருபது ஆண்டுகளில் முதல் முறையாக அவசர மருத்துவ சேவைகளுக்கான அழைப்புகள் குறைந்துள்ளன.

அவசரமற்ற, பொய்யான அழைப்புகள் குறைந்ததே அதற்கு காரணம் என்று இன்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் தெரிவித்தது.

அவசர மருத்துவ சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குச் செல்ல விரும்புவோர், குடிமைத் தற்காப்புப் படையின் உதவியை நாடுவது வழக்கம்.

ஆனால் அத்தகைய வழக்கத்தில் முதல் முறையாக மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

கொவிட்-19 முறியடிப்பு காலக்கட்டத்தில் போக்குவரத்து மற்றும் வேலையிட விபத்துகள் குறைந்ததும் இதர சில காரணங்களாகும்.

கடந்த ஆண்டு மொத்தம் 190,882 அவசர மருத்துவ சேவைகளுக்கான அழைப்புகளை குடிமைத் தற்காப்புப் படை கையாண்டுள்ளது.

அதாவது நாளுக்கு 520 அழைப்புகளாகும். இது, 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 0.3 விழுக்காடு குறைவாகும்.

அதே சமயத்தில் அவசர தொலைபேசி எண் 995க்கு வந்த மொத்த அழைப்புகளில் அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கு மட்டும் 175,953 அழைப்புகள் வந்தன.

2019ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் இது வெறும் 1.2 விழுக்காடு உயர்வாகும். இவ்வளவு குறைவான அளவில் அதிகரித்திருப்பது, கடந்த இருபது ஆண்டுகளில் இதுவே முதல்முறை.

எண்பது விழுக்காடு அழைப்புகள், மாரடைப்பு போன்ற அவசர சிகிச்சைக்காக அழைக்கப்பட்டவை என்று அறிக்கை தெரிவித்தது.

கடந்த ஆண்டும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்பான அழைப்புகள் அதிகமாகவே காணப்பட்டன.

எல்லா வயதினருடனும் ஒப்பிடுகையில் அவர்களுடைய அழைப்புகள் மட்டும் 43 விழுக்காடு.

கடந்த ஆண்டு 8,835 அவசரமற்ற அழைப்புகள் வந்துள்ளன. இது, 16.1 விழுக்காடு குறைவாகும். பொய்யான அழைப்புகளும் கடந்த ஆண்டு 14.1 விழுக்காடு சரிந்து 6,094 ஆனது.
கொள்ளை நோய் பரவும் சூழலில் அதிகமானவர்கள் வீட்டில் தங்கியதால் அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கான தேவை குறைந்தது என்று குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.

அவசரமற்ற மருத்துவ சிகிச்சைக்கு 995 எண்ணை அழைக்க வேண்டாம் என்று குடிமைத் தற்காப்புப் படை மேற்கொண்ட பொது விழிப்புணர்வு முயற்சியினாலும் அந்த எண்ணுக்கு வரும் அழைப்புகள் குறைந்தன.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கடந்த ஆண்டு கொவிட்-19 நோயாளிகளையும் கையாண்டுள்ளது. கிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட 2,000 பேரையும் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 8,300 பேரையும் அது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

கடந்த ஆண்டு 1,877 தீ விபத்து தொடர்பான அழைப்புகள் வந்தன. ஆனால் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது, 34.4 விழுக்காடு குறைவாகும். தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான தீ விபத்துகள் 2019லிருந்து 59 விழுக்காடு குறைந்தன. ஆனால் மின்சார சைக்கிள் தொடர்பாக 26 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இது, இரண்டு மடங்கு உயர்வாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!