வீட்டு உரிமையாளர்களாக மாறிய 4,600 குடும்பங்கள்

பொது வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் தங்கிய சுமார் 4,600 குடும்பங்கள் கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு வீட்டு மானியங்கள் மற்றும் உதவித்திட்டங்களின்மூலம் வீட்டு உரிமையாளர்களாக மாறியுள்ளனர்.

2023ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 1,000 குடும்பங்களுக்கு வீடமைப்பு வளர்ச்சி கழகம் உதவிக்கரம் நீட்டவுள்ளது. இந்த 4,600 குடும்பங்களில் நான்கில் மூன்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திலிருந்து வீடு ஒன்றை நேரடியாக வாங்கினர். இதர பேர் மறுவிற்பனை வீட்டை திறந்த சந்தையில் வாங்கியதாக வீவக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இந்தக் குடும்பங்களில் பாதிக்கு மேல் மூன்று அறை வீடுகளை வாங்கின. அத்துடன் நான்கில் ஒரு கால்பங்கினர் நான்கறை வீடுகளை வாங்கினர்.

வாடகை வீடுகளில் தங்கும் குடும்பங்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு, மேம்பட்ட மத்திய சேமநிதி மானியம் (இஎச்ஜி) போன்ற வீட்டு மானியங்களைப் பயன்படுத்தின. தகுதியுள்ள குடும்பங்களுக்கு 80,000 வெள்ளி மானியம் கிடைத்துள்ளது. கூடுதல் மத்திய சேமநிதி மானியம் (எஎச்ஜி), சிறப்பு வீட்டு மானியம் (எஸ்எச்ஜி) போன்ற மானியங்களும் பயன்படுத்தப்பட்டன.

தற்போது சுமார் 50,000 குடும்பங்கள் பொது வாடகை வீடுகளில் தங்கியுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!