கொவிட்-19: புதிதாக 24 பேருக்கு பாதிப்பு

கொவிட்-19: புதிதாக 24 பேருக்கு பாதிப்பு

1 mins read
344cf739-2a90-40d5-8973-9b7342e07c53
-

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சுமார் 24 பேருக்கு புதிதாக கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டோரில் ஒருவர் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்.

மீதமுள்ள 23 பேர் வெளிநாட்டில் இக்கிருமியைத் தொற்றியவர்கள். இவர்கள் சிங்கப்பூருக்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றுகின்றனர். ஊழியர்கள் தங்கும் விடுதியில் எந்தப் புதிய சம்பவங்களும் பதிவாகவில்லை. புதிய சம்பவங்கள் சேர்த்து சிங்கப்பூரில் பதிவான மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 59,699. முதல் சம்பவம் ஜனவரி 23ஆம் தேதியில் பதிவானது.

சனிக்கிழமையன்று, கொவிட்-19 மறுதொற்று சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது. 43 டெக் பார்க் கிரெசண்டிலுள்ள ஊழியர் தங்கும் விடுதியிலுள்ள 28 வயது பங்ளாதேஷ் ஊழியர் பாதிக்கப்பட்டவர் ஆவார்.