இவ்வாண்டின் வரவு செலவுத் திட்டம் வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும்.
திட்ட விவரங்களை துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் அறிவிப்பார்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐந்து வரவு செலவுத் திட்டங்களின் மூலம் கிட்டத்தட்ட 100 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் நிதி அமைச்சருமான திரு ஹெங், இந்தத் திட்டம் ஊழியர்களுக்கு உதவுவதுடன் சூழலுக்கு ஏற்ப மாறி,புத்தாக்கத்தைக் கடைப்பிடித்து வளர நிறுவனங்களுக்கும் உதவும் என்று கூறினார்.