110,000 உள்ளூர்வாசிகளுக்கு வேலை

ஊதிய மானியம் வழங்கும் வேலை உருவாக்கத்துக்கான ஊக்குவிப்புத் திட்டம் நடப்புக்கு வந்த முதல் இரண்டு மாதங்களில், வேலை தேடும் 110,000க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் 26,000 நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது, இந்தத் திட்டம் நடப்புக்கு வந்த முதல் மாதமான கடந்த செப்டம்பரில் பணி அமர்த்தப்பட்ட 50,000 பேரைவிட இருமடங்கு என ஆரம்ப மதிப்பீடுகள் சுட்டுகின்றன.

இவர்களில் பாதிப் பேர் 40 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும்உடையவர்கள் என்று நேற்று மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
கொவிட் கொள்ளைநோய் சூழல் ஏற்படுத்திய பொருளியல் பாதிப்பை ஈடுகட்டும் வகையில், நிறுவனங்கள் உள்ளூர்வாசிகளை வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் இந்தத் திட்டம் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் கண்டது. இத்திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு ஊதிய ஆதரவை வழங்க $1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

“இதில் தென்படும் வேகம் சிறப்பாக உள்ளது. எனினும், இது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை,” என்று நேற்று வேலைவாய்ப்பு முகவையான ‘சர்ச் ஏஷியா’வுக்கு வருகையளித்த மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார்.
“வேலை தேடுபவர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து உதவும். அதேநேரத்தில், ஊழியர்களைப் பெறுவதில் இன்னமும் சிரமங்களை எதிர்கொள்ளும் முதலாளிகளை தங்களது ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது,” என்றார் அவர்.
பொருளியல் மீட்சி ஏற்ற இறக்கமாக இருக்கும் சூழ்நிலையில், மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் வேலை வாய்ப்புகள் சீராகத் தெரிந்தாலும், கீழ் மட்டத்தில் அவ்வளவு தெளிவு இல்லாமல் இருக்கலாம். இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் திருவாட்டி டியோ சுட்டினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை உள்ளூர்வாசிகளை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள், அவர்களின் மொத்த மாத சம்பளத்தில் முதல் $5,000யில் 25 விழுக்காட்டை மானியமாக ஓராண்டுக்கு பெறும்.
40 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய ஊழியர்களுக்கு இணை கட்டணமாக 50 விழுக்காடு வரை கிடைக்கும்
மொத்தத்தில், தகுதிவாய்ந்த நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்தும் 40 வயதிற்குட்பட்ட ஒவ்வோர் உள்ளூர் ஊழியருக்கும் $15,000 வரையிலும், 40 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒவ்வோர் உள்ளூர் ஊழியருக்கும் $30,000 வரையிலும் பெறலாம்.
உணவு சேவைகள், மொத்த வர்த்தகம், தொழில்முறை சேவைகள், சில்லறை விற்பனை, கட்டுமானம் உள்ளிட்டவை அதிகமா னோரை வேலையில் அமர்த்தும் துறைகள் என அமைச்சு கூறியது.
அக்டோபரில் மட்டும், 11,000க்கும் மேற்பட்ட புதிய முதலாளிகள் இந்த திட்டத்திற்குத் தகுதி பெற்றனர்.
செப்டம்பர் மாதத்தில் திட்டத்தின் வழங்கீடுகளுக்குத் தகுதி பெற்ற 14,000 நிறுவனங்களில் 80% அதற்கடுத்த மாதத்திலும் தங்கள் உள்ளூர் ஊழியர் எண்ணிக்கையை தக்கவைத்துக்கொண்ட அல்லது விரிவுபடுத்தின என்று அமைச்சு குறிப்பிட்டது.
தகுதிபெற்ற முதலாளிகளில் பெரும்பான்மையானவர்கள் ஒன்று முதல் இரண்டு உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர், அவர்களில் 20 விழுக்காட்டினர் ஐந்து உள்ளூர்வாசிகளை அல்லது அதற்கு மேற்பட்டவர்களை சேர்த்துக்கொண்டனர்.
பிப்ரவரி மாதத்திற்கு பிறகும் இந்தத் திட்டத்தை நீட்டிப்பது குறித்து தொழிலாளர் இயக்கமும் முதலாளிகளும் நிதி அமைச்சகத்துடன் பேச்சு நடத்துகின்றனர் என்று திருவாட்டி டியோ கூறினார்.
பிப்ரவரி 16ஆம் தேதி வெளியிடப்படவுள்ள வரவுசெலவுத் திட்டம் அறிவிப்பு பல திட்டங்களை ஆராயும் என்றும் அவர் கூறினார்.
வரவிருக்கும் திட்டங்களை வரவேற்ற, தேசிய தொழிற்சங்க காங்கிரசின் உதவிப் பொதுச்செயலாளர் டெஸ்மண்ட் சூ, வேலை உருவாக்கத்துக்கான ஊக்குவிப்புத் திட்டம் போன்ற திட்டங்களை எதிர்பார்ப்பதாகக் கூறினார். அத்துடன் இத்திட்டத்தை நீட்டிக்க முடிந்தால், குறிப்பாக மூத்த ஊழியர்களுக்கு, மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் சொன்னார். உள்ளூர்வாசிகள் அடையாளம் கண்டிராத வேலைகளைக் கண்டுபிடிக்க உதவுமாறு வேலைவாய்ப்பு முகவைகளை அவர் கேட்டுக்கொண்டார்.
இதைச் செயல்படுத்த, மனித மூலதன பங்காளித்துவத்தை (வேலைவாய்ப்பு முகவைகள்) அமைச்சு நேற்று தொடங்கியது.
உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்துவதை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்குத் துணைபோகும் வகையில், நிறுவனங்கள் சிங்கப்பூரரை மையப்படுத்துவதை வலுப்படுத்த உதவும் கட்டங்கட்டமாக வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கிறது. இத்தகைய வேலை வாய்ப்பு நிறுவனங்கள், குறிப்பாக பணியிடைக்கால வேலை தேடுபவர்களுக்கு உதவக்கூடும் என்று திருமதி டியோ மேலும் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!