நிதிச் சேவைகளை வழங்கும் பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனமான 'நட்டிக்சிஸ்', ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைக்காசு நிதிக்கு $150,000 நன்கொடை அளித்து உள்ளது.
வசதிகுறைந்த சிங்கப்பூர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த நிதி உதவுகிறது.
இதுகுறித்து பேசிய கைக்காசு நிதி பொது மேலாளரான திருமதி டான் பீ ஹியோங், "கொவிட்-19 சூழல் காரணமாக பள்ளிக் கைக்காசு நிதியில் இருந்து உதவி கோரும் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. இவ்வேளையில் நட்டிக்சிஸ் நிறுவனம் அளித்துள்ள இந்த நன்கொடை, வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிக் கைக்காசு வழங்க எங்களுக்கு உதவும்," என்று நம்பிக்கை தெரிவித்தார்.
2000ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிதி, இதுவரை ஏறத்தாழ 180,000 மாணவர்களுக்கு $80 மில்லியனுக்கு மேல் வழங்கி உதவி உள்ளது.

