சிங்கப்பூரில் பாதுகாப்புப் பணிகள், உணவு விநியோகம், தேசிய தின அணிவகுப்பு போன்ற பெரிய அளவிலான நிகழ்ச்சிகளில் ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படுவதை இங்கு பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்கின்றனர்.
ஆளில்லா வானூர்திகளின் பரவலான பயன்பாட்டிற்கு இங்கு பத்தில் அறுவருக்கும் மேலானோர் தயாராக உள்ளனர்.
மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் ஒப்புநோக்க, கடந்த 2019ஆம் ஆண்டில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 1,050 சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளிடம் நடத்திய ஆய்வில், சிங்கப்பூர்வசிகள் அதிகமானோர் வணிக ரீதியாக ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படுவதற்கு ஆதரவு அளித்தது தெரியவந்தது.
இதுகுறித்து சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 23 விழுக்காட்டினர் வானூர்திகளின் பயன்பாட்டிற்கு ஆதரவளித்தனர். மாறாக, சிங்கப்பூரில் 73.6 விழுக்காட்டினர் அதற்கு ஆதவளித்தனர்.
பொதுவாக வானூர்திகளை அரசாங்கமோ நிறுவனங்களோ தனிநபர்களோ யார் பயன்படுத்தினாலும் சரி, அவற்றின் பயன்பாட்டிற்குத் தாங்கள் ஆதரவளிப்பதாக இங்கு 65 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தெரிவித்தனர்.