இனவாதக் கருத்துகளை வெளியிட்டவருக்கு சிறை

இனங்­க­ளுக்­கி­டையே வெறுப்பை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் கடந்த ஆண்டு பொதுத் தேர்­த­லின்­போது கருத்­து­களை வெளி­யிட்ட ஆட­வர் ஒரு­வ­ருக்கு இரண்டு வாரச் சிறை­யும் $7,000 அப­ரா­த­மும் தண்­ட­னை­யாக விதிக்­கப்­பட்­டது.

சிரா­ஜு­தீன் அப்­துல் மஜீத் (படம்) எனும் அந்த 52 வயது ஆட­வர், வேண்­டு­மென்றே இன உணர்­வு­க­ளைக் காயப்­ப­டுத்த நினைத்­தது, இனக் குழுக்­க­ளுக்­கி­டையே வன்­மத்­தைத் தூண்­டி­விட்­டது என்று தம் மீது சுமத்­தப்­பட்ட குற்­றத்தை நேற்று ஒப்­புக்­கொண்­டார்.

கடந்த ஆண்டு ஜூன் 12, 13ஆம் தேதி­களில் தமது மூன்று நண்­பர்­க­ளுக்கு, “மக்­கள் செயல் கட்சி மலாய் சமூ­கத்தை துணை சிறு­பான்­மைக் குழு­வாக உரு­வாக்க நினைக்­கிறது. மலாய் சமூ­கத்­தைக் கலைக்­கும் நோக்­கத்­தில்­தான் மற்ற இனங்­கள் இந்­நாட்­டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன,” என்ற செய்­தி­களை அனுப்பி, அதை மற்­ற­வர்­க­ளுடன் பகி­ரும்­படி கேட்­டுக் கொண்­டார்.

மக்­கள் செயல் கட்சி நாட்­டுக்­குள் அதி­க­மான வெளி­நாட்ட வர்­களை அனு­ம­திப் பதன் மூலம் இங்­குள்ள மலாய் சமூ­கத்தை ஓரங்­கட்ட நினைக்­கிறது என்ற கருத்­தின் மூலம் மக்­க­ளி­டையே அச்­சத்தை ஏற்­ப­டுத்த சிரா­ஜு­தீன் முயன்­றார் என்று அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர் இங் யிவென் தெரி­வித்­தார்.

“இப்­ப­டிப்­பட்ட செய்­தி­களை அனுப்­பி­னால் இனங்­க­ளுக்­கி­டையே வெறுப்­பு­ணர்சி ஏற்­படும் என்று நன்கு தெரிந்­து­தான் சிரா­ஜு­தீன் அச்­செய்­தி­களை அனுப்­பி­யுள்­ளார் என்­றும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அவ­ர் நண்­பர்­களில் ஒரு­வர் இது குறித்து போலி­சில் புகார் கொடுத்­தார்.

$5,000 பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்ள சிரா­ஜு­தீன் இம்­மா­தம் 22ஆம் தேதி தமது சிறைத் தண்­ட­னை­யைத் தொடங்க சரண டைவார் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!