முனைவர் பட்டம் பெற்ற பொறியாளர் ரயிலில் பெண்ணிடம் முறைகேடு; 18 நாள்களுக்கு சிறைத் தண்டனை

முனைவர் பட்டம் பெற்ற பொறியாளர் ஒருவருக்கு எம்ஆர்டி ரயிலில் 39 வயது பெண்ணிடம் முறைகேடாக நடந்துகொண்டதற்காக அவருக்கு 18 நாள்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பொறியியல் துறையின் ‘ஜியோடெக்’ பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற ஷென் சியுஃபு, 54, எனும் அந்த ஆடவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து பின்னர் 2015ஆம் ஆண்டில் அங்கிருந்து வெளியேறினார்.

கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி வடக்கு-தெற்கு பாதையில் செம்பவாங் நிலையத்தில் ரயிலில் ஏறிய சிங்கப்பூரரான ஷென் சியுஃபு, அன்று காலை 7.40 மணியளவில் அங் மோ கியோ நிலையத்தில் ஏறி, தமக்கு அருகில் நின்றிருந்த பெண்ணிடம் முறைகேடாக நடந்துகொண்டார்.

அங் மோ கியோவுக்கும் பீஷானுக்கும் இடைப்பட்ட ரயில் பயணத்தின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஷென்னை கையும் களவுமாக பிடித்த அந்தப் பெண் புகார் அளித்தார்.

சட்டத்துக்கு புறம்பாக ஷென் ஈடுபட்ட முதல் செய்கை இது என்று கூறப்பட்டது. அவருக்கு ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படிகள் விதிக்கப்பட்டிருக்கலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!