சீனப் புத்தாண்டை முன்னிட்டு தெம்பனிஸ் ஸ்திரீட் 11 புளோக் 117ல் வசிக்கும் மலாய் குடும்பத்தினர் தாங்கள் வசிக்கும் நான்காவது மாடியை அலங்கரித்துள்ளனர்.
கண்கவர் சீனப் புத்தாண்டு அலங்காரங்களால் அவ்விடம் பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் அளவில் உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமது 83 வயது தந்தை மரணம் அடைந்ததாகவும் அதைஅடுத்து தமது குடும்பத்துக்கு அண்டைவீட்டுக்காரர்கள் ஆறுதல் கூறி ஆதரவு தந்ததாகவும் நான்காவது மாடியில் வசிக்கும் திரு அப்துல்லா அப்துல் ரஹ்மான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அண்டைவீட்டாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சீனப் புத்தாண்டு அலங்காரங்களால் நான்காவது மாடியை அலங்கரித்திருப்பதாக அவர் கூறினார்.
"எங்கள் தந்தை இறந்த பிறகு, இறுதி மரியாதை செலுத்த பலர் வந்தனர். பெரும் கூட்டத்தை சமாளிக்க எங்கள் வீட்டில் இடம் போதவில்லை. அதனால் எனது சகோதரியின் வீட்டில் தங்க வேண்டியிருந்தது. நாங்கள் வீட்டில் இல்லாதபோது எங்கள் வீட்டு வாசலை சுத்தம் செய்வது, செடி
களுக்கு தண்ணீர் ஊற்றுவது போன்ற உதவிகளை எங்கள் அண்டைவீட்டார் செய்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் சீனப் புத்தாண்டை பல்லின மக்கள் சேர்ந்து கொண்டாடவும் நான்காவது மாடியை அலங்கரித்து உள்ளோம்," என்றார் திரு அப்துல்லா.

