முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சருக்கு பிரதமர் லீ புகழாரம்

முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சருக்கு பிரதமர் லீ புகழாரம்

1 mins read
d90de484-0102-40de-b663-9a5817ea5403
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஜார்ஜ் ஷுல்ட்ஸ் கடந்த சனிக்கிழமையன்று காலமானார். அவருக்கு 100 வயது. திரு ஷுல்ட்சுக்குப் பிரதமர் லீ சியன் லூங் புகழாரம் சூட்டினார். படம்: பிரதமர் லீயின் ஃபேஸ்புக் பக்கம் -

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஜார்ஜ் ஷுல்ட்ஸ் கடந்த சனிக்கிழமையன்று காலமானார். அவருக்கு 100 வயது. திரு ஷுல்ட்சுக்குப் பிரதமர் லீ சியன் லூங் புகழாரம் சூட்டினார்.

பனிப்போர் முடிவுக்கு வர திரு ஷுல்ட்ஸ் முக்கிய பங்காற்றியதாக அவர் தெரிவித்தார்.

மூன்று அதிபர்களின் பதவிக் காலங்களில் நான்கு வெவ்வேறு அமைச்சரவைப் பதவிகளில் திரு ஷுல்ட்ஸ் பதவி வகித்ததாக திரு லீ தாம் எழுதிய இரங்கல் கடிதத்தில் குறிப்பிட்டார்.

ஆழ்ந்த கடப்பாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் திரு ஷுல்ட்ஸ் அமெரிக்காவுக்குச் சேவையாற்றியதாக திரு லீ பாராட்டினார்.

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் நெருங்கிய நண்பராக திரு ஷுல்ட்ஸ் இருந்தார். 1973ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.

ஆகக் கடைசியாக 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் திரு ஷுல்ட்சை நேரில் சந்தித்ததாக பிரதமர் லீ கூறினார். அணுவாயுத மிரட்டல்கள் தொடர்பாக சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக திரு ஷுல்ட்ஸ் வந்தபோது அவரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்ததாக பிரதமர் லீ தெரிவித்தார்.