சிங்கப்பூரை பசுமை நகராக்க புதிய திட்டம்

சிங்­கப்­பூ­ரின் வாழ்க்­கை­முறை 2030ஆம் ஆண்­டு­வாக்­கில் பசுமை மிகுந்­த­தாக இருக்­கும். மக்­கள் வேலை செய்­யும் முறை­யி­லும் படிப்­பது, விளை­யா­டு­வது போன்­ற­வற்­றி­லும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தக்கூடிய நீடித்து நிலைத்­த­லுக்­குத் தேவை­யான நட­வ­டிக்­கை­கள் அறி­மு­க­மா­வது பசுமை நிலை­யைச் சாத்­தி­ய­மாக்­கும்.

ஐந்து அமைச்­சு­கள் ஒன்­றி­ணைந்து நேற்று வெளி­யிட்ட ‘சிங்­கப்­பூர் பசு­மைத் திட்­டம் 2030’ நீடித்த நிலைத்­தன்­மையை நோக்கி நடை­போ­டும் சிங்­கப்­பூ­ரின் எதிர்­கா­லத்தை வடி­வ­மைக்க உத­வும்.

உள்­கட்­ட­மைப்பு தொடங்கி மேம்­பாடு, ஆராய்ச்சி, புத்­தாக்­கம், பயிற்­சித் திட்­டங்­கள் வரை சமூ­கத்­தின் எல்­லாத் துறை­கள் வழி­யா­க­வும் இந்த விரி­வான திட்­டம் இயங்­கும்.

நீடித்த நிலைத்­தன்மை நிறைந்த எதிர்­கா­லத்­திற்கு உரு­மாற விரும்­பும் சிங்­கப்­பூரை ஒருங்­கி­ணைக்­கும் எண்­ணம் கொண்­டது இத்­திட்­டம்.

கொவிட்-19 கார­ண­மாக பொரு­ளி­யல் வீழ்ச்­சி­யில் இருந்து மீண்­டெழ ‘நல்­ல­மு­றை­யில் பழைய நிலைக்­குத் திரும்­பும்’ உல­க­ம­யத்­தன்­மைக்கு ஏற்ப இதன் நோக்­கம் அமை­யும்.

கல்வி, தேசிய வளர்ச்சி, சுற்­றுச்­சூ­ழல் மற்­றும் நீடித்த நிலைத்­தன்மை, வர்த்­தக தொழில், போக்கு­வ­ரத்து ஆகிய ஐந்து அமைச்­சு­கள் இந்­தத் திட்­டத்­தின் பின்­ன­ணி­யில் உள்­ளன.

“சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யலை வலுப்­ப­டுத்­து­வ­தோடு பரு­வ­நிலை மற்­றும் வளங்­க­ளுக்­கான மீள்

­தி­றனை அளித்து சிங்­கப்­பூ­ரர்­க­ளின் வாழ்க்­கைச் சூழலை இந்த விரி­வான திட்­டம் மேம்­ப­டுத்­தும். மேலும் புதிய வர்த்­த­கங்­க­ளை­யும் வேலை வாய்ப்­பு­க­ளை­யும் இது கொண்டு வரும்,” என்று ஐந்து அமைச்­சு­கள் இணைந்து கூட்­டாக வெளி­யிட்ட அறிக்கை தெரி­விக்­கிறது.

“நமது வாழ்க்­கை­யில் எல்லா அம்­சங்­க­ளி­லும் இது பலன் அளிக்­கும். எவ்­வாறு வசிக்­கி­றோம் என்­ப­தில் இருந்து எவ்­வாறு வேலை செய்­கி­றோம், எவ்­வாறு அனு­ப­விக்­கி­றோம் என்­பது வரை எல்­லா­வற்­றி­லும் அந்­தப் பலன் இருக்­கும். பசுமை நிறைந்த, அதி­கம் வாழத்­த­குந்த இல்­ல­மாக சிங்­கப்­பூரை உரு­வாக்க ஒரு தேச­மாக நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து பாடு­பட இத்­திட்­டம் ஒத்­து­ழைக்­கும்,” என்று அறிக்கை குறிப்­பிட்­டது.

பசு­மைத் திட்­டத்தை ஐந்து அமைச்­சு­க­ளைச் சேர்ந்த அமைச்­சர்­கள் விவ­ரிக்­கும் 15 நிமிட காணொளி ஒன்றும் பகி­ரப்­பட்­டது. ஒவ்­வோர் அமைச்­ச­ரும் திட்­டத்­தில் தங்­க­ளது அமைச்­சின் பங்கு பற்றி விளக்­கி­னர்.

ஐந்து முக்­கி­ய­மான அம்­சங்­க­ளைத் திட்­டம் பெற்­றி­ருக்­கும். இயற்கை நக­ரம், நீடித்த நிலைத்­தன்மை வாய்ந்த வாழ்க்கை முறை, எரி­சக்தி புதுப்­பிப்பு, பசு­மைப் பொரு­ளி­யல், மீள்­தி­றன் மிகுந்த எதிர்­கா­லம் ஆகி­யன அவை.

கட்­ட­டங்­க­ளின் தரத்தை நீடித்த நிலைத்தன்­மைக்கு உயர்த்­தும் திட்­டங்­கள் இருப்­ப­தால் பசு­மைச் சூழல் கட்­ட­டங்­களில் வேலை செய்ய முடி­யும். சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த கட்­டடங்­

க­ளுக்கு சான்­றி­தழ் வழங்­கும் தற்­போ­தைய பசுமை முத்­தி­ரைத் திட்­டம் மறு­ஆய்வு செய்­யப்­பட்டு, எரி­சக்தி ஆற்­றலை உயர்த்­தும் வகை­யி­லான தொழில்­நுட்­பம் அதில் புகுத்­தப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!