'உயரம் சார்ந்த பள்ளி நடவடிக்கைகளுக்கு ஏற்கெனவே தடை இருந்தது'

'உயரம் சார்ந்த பள்ளி நடவடிக்கைகளுக்கு ஏற்கெனவே தடை இருந்தது'

2 mins read
2dd98885-6fa4-4bd7-bd21-003ddf085285
கான்கார்ட் தொடக்கப்பள்ளி மாணவி ஒருவர் உயரம் சார்ந்த பள்ளி இணைப்பாட நடவடிக்கையின்போது கீழே விழுந்த சம்பவம் சென்ற ஆண்டு பிப்ரவரியில் நடந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பள்ளி இணைப்­பாட நட­வ­டிக்­கை­யின் ஓர் அங்­க­மாக கான்­கார்ட் தொடக்­கப்­பள்ளி மாணவி ஒரு­வர், உய­ரத்­தில் 'ஸிப்­லைன்' சாகச விளை­யாட்­டில் ஈடு­பட்­டி­ருந்­த­போது கீழே விழுந்­து­விட்­டார். சென்ற ஆண்டு பிப்­ர­வரி மாதம் தொடக்­க­நிலை நான்கு பயின்ற அந்த மாண­விக்கு இவ்­வி­பத்து நேர்ந்­தது.

மருத்­துவ சிகிச்சை முதல் மீண்­டும் பள்ளி திரும்­பு­வது வரை மாண­விக்­கும் அவ­ரது குடும்­பத்­தா­ருக்­கும் பள்ளி முழு ஆத­ரவு அளித்­த­தா­கக் கூறப்­பட்­டது.

அதை­ய­டுத்து, உய­ரத்­தில் நடை­பெ­றக்­கூ­டிய அனைத்து பள்ளி சார்ந்த நட­வ­டிக்­கை­களும் தற்­காலி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்­டன.

கொவிட்-19 சூழல் கருதி அந்­தத் தற்­கா­லி­கத் தடை, இவ்­வாண்டு ஜன­வரி வரை நீட்­டிக்­கப்­பட்­ட­தாக கல்வி அமைச்சு தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில், அனைத்­துப் பள்ளி­க­ளி­லும் 'ஸிப்­லைன்' நட­வடிக்கை கூடு­தல் பாது­காப்­பு­டன் நடை­பெற வேண்­டும் என்­ப­தற்­காக நடப்­பில் இருந்த செயல்­மு­றை­களை கல்வி அமைச்சு மறு­ஆய்வு செய்து மேலும் பல பாது­காப்பு அம்­சங்­களை இவ்­வாண்டு ஜன­வரி 5ஆம் தேதி முதல் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது.

இருப்­பி­னும், இவ்­வாண்டு மீண்­டும் ஓர் அசம்­பா­வி­தம் நடந்­தது.

சாஃப்ரா ஈசூ­னின் உய­ர­மான ஓர் அமைப்­பில் பள்ளி முகாம் நட­வடிக்­கை­யில் ஈடு­பட்­டி­ருந்த 15 வயது ஆங்­கிலோ-சீனப் பள்ளி (தன்­னாட்சி) மாண­வர் ஜெத்ரோ புவா, தன் கால் பிடி­யைத் தவ­ற­விட்­டார். உட­லில் பாது­காப்­புக் கயிறு இருந்­த­வாறு அந்­த­ரத்­தில் தொங்­கிய அவர், அப்­போதே தன் சுய­நி­னைவை இழந்­தார். கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்டு, மறு­நாள் இறந்­து­விட்­டார்.

தொடர்ந்து பிப்­ர­வரி 4ஆம் தேதி முதல் அனைத்­துப் பள்­ளி­களும் உய­ரம் சார்ந்த வெளிப்­புற நட­வடிக்­கை­களை உட­ன­டி­யாக நிறுத்­தி­வைத்­து­விட்­டன.

சென்ற ஆண்டு பிப்­ர­வரி மாதம் நடந்த சம்­ப­வத்­தில், கல்வி அமைச்­சின் பதி­வி­லி­ருந்து சம்­பந்­தப்­பட்ட பயிற்­சி­யா­ளர் அகற்­றப்­பட்­ட­தா­க­வும் கல்வி அமைச்­சின்­கீழ் இயங்­கும் அனைத்து பள்­ளி­க­ளுக்­கும் சேவை வழங்­கத் தடை­செய்­யப்­பட்­ட­தா­க­வும் அமைச்­சின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

சென்ற ஆண்டு சம்­ப­வத்தை அடுத்து, 'ஸிப்­லைன்' நட­வ­டிக்­கை­யின்­போது மேலும் இன்­னொரு பயிற்­சி­யா­ளர் இருப்­பது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டது.

பயிற்­சி­யா­ளர்­க­ளுக்கு முறை­யான சான்­றி­தழ்­கள் உள்­ள­தைப் பள்­ளி­கள் உறு­தி­செய்த பின்­னரே இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை நடத்து­வ­தற்­காக வெளி நிறு­வ­னங்­களை நாட­வேண்­டும்.

தேவை ஏற்­பட்­டால் நட­வ­டிக்கை நடை­பெ­றும் இடத்­தில் மீட்­புப் பணி மேற்­கொள்ள குறைந்­தது ஒரு­வருக்­கா­வது சான்­ற­ளிப்­புத் தகுதி இருக்க வேண்­டும்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளால் ஒரு­சில பயிற்­சி­யா­ளர்­க­ளுக்­கும் பகு­தி­நே­ரப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் போதிய பயிற்சி இல்­லா­மல் போயி­ருக்­க­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.