சிங்டெலில் 500 வேலைகள்

சிங்­டெல் நிறு­வ­னம் அடுத்த இரண்டு ஆண்­டு­களில் சிங்­கப்­பூ­ரில் 500 நிபு­ணர்­களை வேலை­யில் சேர்த்து, அவர்­க­ளுக்­குப் பயிற்சி அளிக்க உள்­ளது.

தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­ய­மும் (ஐஎம்­டிஏ), சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம் (என்­யு­எஸ்), சிங்­கப்­பூர் பல­துறை தொழில்­நுட்­பக் கழ­கம் (எஸ்பி) ஆகி­ய­வற்­றின் ஒருங்­கி­ணைந்த முயற்­சி­யின் ஒரு பகு­தி­யாக இந்த வேலை, பயிற்­சித் திட்­டம் இடம்­பெ­று­கிறது.

இவற்­றில், 150 வேலை­கள் புதிய 5ஜி இணையச் சேவை தொடர்­பான கட்­ட­மைப்பு பொறி­யி­யல், மின்­னி­லக்க சேவை­கள், 5ஜி தயா­ரிப்பு, இயங்­கு­தள மேம்­பாடு போன்ற வேலை­க­ளா­கும்.

மீத­முள்­ள­வர்­க­ளுக்கு இணை­யம் வழி தக­வல்­க­ளைப் பரி­மா­றிக்­கொள்­வ­தற்­கான கணி­னிக் கட்­ட­மைப்­பு­களை உரு­வாக்­கு­தல், ‘கிளவுட்’ பொறி­யி­யல், தரவு பகுப்­பாய்வு போன்ற வளர்ந்து வரும் இணையத் தொழில்­நுட்­பங்­களில் பயிற்சி அளிக்­கப்­படும் என்று சிங்­டெல் நேற்று தெரி­வித்­தது.

அடுத்த ஆண்டு சிங்­கப்­பூ­ரில் அதி­வேக 5ஜி இணை­யக் கட்­ட­மைப்பு அறி­மு­கப்­ப­டுத்த உள்ள நிலை­யில், அதற்கு தயா­ரா­வ­தற்­காக தற்­போ­துள்ள 2,300 ஊழி­யர்­களை சிங்­டெல் நிறு­வ­னம் தக்­க­வைத்­துக்­கொள்­ளும்.

இந்த ஆண்டு இறு­திக்­குள் 5ஜி நிபு­ணத்­து­வத்­தில் 1,000 வேலை­களை உரு­வாக்க தொலைத்­தொடர்பு நிறு­வ­னங்­க­ளு­டன் செயல்­படுவோம் என்று ஐஎம்­டிஏ கடந்த செப்­டம்­ப­ரில் அறி­வித்­தது.

இதில் சில வேலை­கள் சிங்டெலின் எதிர்­கால 500 பணி­க­ளால் நிரப்­பப்­படும். இதில் புதிய பட்­ட­தா­ரி­களும், பணி­யி­டைக்­கால நிபு­ணர்­களும் இடம்­பெ­று­வர்.

“அடுத்த இரண்டு ஆண்­டு­களில் 500 பேரை வேலை­யில் அமர்த்­தும் சிங்­டெலின் திட்­டம், தக­வல் தொடர்பு தொழில்­நுட்­பத் துறை­யின் ஒட்­டு­மொத்த திறனை வளர்ப்­ப­தில் ஒரு முக்­கிய அங்­க­மா­கும். அதே­நே­ரத்­தில் ஏற்­கெனவே சிங்­டெலில் உள்­ள­வர்­கள் திறன் மாற்­ற­மும் முக்­கி­ய­மா­னது,” என்­றார் தொடர்பு தக­வல் அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன்.

“அடிப்­ப­டை­யில், ஒட்­டு­மொத்த சிங்­கப்­பூர் திற­னா­ளர்­க­ளு­ட­னும் இணைந்து செயல்­பட வேண்­டும்,” என்­றார் அவர்.

சிங்­டெல் ஊழி­யர்­க­ளுக்­கான பயிற்சி சில வாரங்­கள் வரை­யிலான குறு­கியகால படிப்­பு­ முதல் ஓராண்டு அல்­லது அதற்­கும் அதி­க­மான முழு­நேர கல்­வித் திட்­டங்­கள் வரை கொண்­டி­ருக்­கும்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம், சிங்­கப்­பூர் பல­துறை தொழில்­நுட்­பக் கழ­கம் உட­னான சிங்­டெ­லின் பங்­கா­ளித்­து­வம் 5ஜி இணையச் சேவை, தொலைத்­தொ­டர்பு ‘புரோ­கி­ராம் மானேஜர்’ திட்­டத்­தின் கீழ் வரு­கிறது. இது தொழில் துறை பங்­கா­ளி­கள் 5ஜி இணைய சேவை தொடர்­பான பயிற்சி வகுப்­பு­களை அடை­யாளம் கண்டு உரு­வாக்க உதவுகிறது.

மென்­பொ­ருள் உரு­வாக்­கு­நர்­கள் போன்ற வேலை­க­ளுக்­கான பயிற்­சி­யும் ஐஎம்­டி­ஏ­வின் ‘டெக்ஸ்­கில்ஸ் அசி­ல­ரேட்­டர்’ (டீஎஸ்ஏ) நிறு­வ­னம் தலை­மை­யி­லான பயிற்­சித் திட்­டங்­கள் மூலம் வழங்­கப்­படும்.

சிங்­கப்­பூ­ரின் நாடு தழு­விய இரண்டு 5ஜி இணை­யக் கட்­ட­மைப்­பு­களை உரு­வாக்­கு­வ­தற்­கான உரி­மை­களை சிங்­டெல்­லும் ஸ்டார்­ஹப், எம்1 இடை­யே­யான பங்­கா­ளித்­து­வ­மும் வென்­றது.

ஐஎம்­டி­ஏ­வின் விதி­மு­றை­க­ளின்­படி, தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­கள் 2022ஆம் ஆண்­டின் இறு­தி­யில் குறைந்­தது சிங்­கப்­பூ­ரின் பாதி பகு­திக்­கும் 5ஜி தொலை­பேசி கட்­ட­மைப்பு வச­தியை வழங்க வேண்­டும். 2025 ஆண்­டுக்­குள் நாடு தழு­விய அள­வில் இச்­சேவை வழங்­கப்­பட வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!