தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிபிஎஸ் காலாண்டு லாபம் 33% சரிவு

1 mins read
d66133db-33a1-44ba-bc01-35614faa91e5
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வங்­கி­யின் நிகர வட்டி அளவு வீழ்ச்சி­ய­டைந்­த­தா­லும் கொவிட்-19 தொற்­று­நோய்க்கு மத்­தி­யில் வாராக் கடன்­கள் அதி­க­மாக இருக்­கும் என்­ப­தா­லும் நான்­கா­வது காலாண்டு வரு­வா­யில் 33 விழுக்­காடு சரிவு ஏற்­பட்­ட­தாக டிபி­எஸ் குழு­மம் நேற்­றுத் தெரி­வித்­துள்­ளது.

எனி­னும், இந்த ஆண்டு நிலவரம் குறித்து டிபி­எஸ் தலைமை நிர்­வாகி பியூஷ் குப்தா நம்­பிக்­கை­யு­டன் உள்ளார்.

இந்த ஆண்டு உறு­தி­யான பொரு­ளி­யல் மீட்­சியை அண்­மைய பொரு­ளி­யல் தர­வு­கள் கோடி­காட்டு­கின்­றன என்­றும் ஜன­வரி மாத சிறப்­பான வங்­கி­யின் செயல்­பாடு இந்த ஆண்­டிற்கு நல்ல தொடக்­கத்தை அளித்­துள்­ளது என்­றும் கூறி­னார்.

டிபி­எஸ் காலாண்டு அறிக்கை வெளி­வந்த பின் டிபி­எஸ் பங்­கு­கள் நேற்­றுக் காலை 9.37 மணிக்கு ஒன்­பது காசு­கள் அல்­லது 0.35% உயர்ந்து $26.02 ஆக இருந்­தது.

தென்­கி­ழக்கு ஆசி­யா­வின் மிகப் பெரிய கடன் வழங்­கும் நிறு­வ­ன­மான இந்த வங்­கி­யின் நிகர லாபம் $1.01 பில்­லி­யன். இது ஓராண்­டுக்கு முன்­னர் $1.5 பில்­லி­யன் ஆக இருந்­தது.

புளூம்பெர்க்கின் ஏழு ஆய்வாளர்கள் கணித்த சராசரி மதிப்பீடான $1.06 பில்லியனைவிட அதன் வருவாய் சற்றுக் குறைவாக இருந்தது.