$1மி. மோசடி; பலே ஆசாமிக்கு 82 மாத சிறை

தெமா­செக் ஹோல்டிங்­சின் பெய­ரைப் பயன்­ப­டுத்தி அதில் முத­லீடு செய்­தால் பெரும் பணம் ஈட்­ட­லாம் என்று கூறி பலரை 200,000 வெள்­ளிக்கு மேல் ஏமாற்­றிய பலே ஆசா­மிக்கு நேற்று ஆறு ஆண்­டு­கள், பத்து மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்பட்­டது.

சத்­தீஷ் நாயர் தன­பா­ல­னுக்கு தற்­போது 36 வய­தா­கிறது.

அண்டை வீட்­டுக்­கா­ர­ரான இளங்­கோ­வன் பிள்ளை முனு­சா­மியை, 56, ஒவ்­வொரு முறை­யும் நல்ல லாபம் கிடைக்­கும் என்று கூறி அவர் ஏமாற்றி வந்­தார்.

2014 முதல் 2016 வரை­யில் நடைெபற்ற மோச­டி­யில் இளங்­கோ­வ­னுக்கு ‘ஹோ சிங்’ என்ற பெய­ரி­லும் குறுந்­த­க­வல்­கள் வந்­தன.

சத்­தீஷ் பல்­வேறு முத­லீட்டு திட்­டங்­களை வகுத்து ஒன்­பது பேரி­டம் ஏறக்­கு­றைய ஒரு மில்­லி­யன் வெள்ளி ஏமாற்­றி­யுள்­ளார்.

2017ல் இதே போன்ற முத­லீட்டு உத்­தி­யைப் பயன்­ப­டுத்தி ஃபதில்லா இப்­ரா­ஹிம், அவ­ரது கண­வர் அனிஸ் சிரா­ஜு­டின் ஷேக் அப்­துல்லா அவ­ரது தாயார் திரு­மதி பர­க­த்து­னிசா இ.ஏ.ஹலி­யுல் ரஹி­மான் ஆகி­யோரை 400,000 வெள்­ளிக்கு மேல் அவர் மோசடி செய்­துள்­ளார். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஏன் பணம் கிடைக்­க­வில்லை என்­பதை காட்­டு­வ­தற்­காக அர­சாங்க அமைப்­பு­க­ளின் பொய்­யான ஆவ­ணங்­க­ளை­யும் அவர் தயா­ரித்து வழங்கினார்.

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தந்தையின் நான்கு காசோலைகளை திருடி அதில் தந்தையைப் போல கையெழுத்திட்டு அவர் மோசடி செய்துள்ளார்.

இரண்டு காசோலைகளை அனிசுக்கும் ஃபதில்லா, திருமதி பரகத்துனிசா ஆகிய இருவருக்கு தலா ஒரு காசோலைகளை அவர் கொடுத்துள்ளார். ஒவ்வொரு காேசாலையும் 150,000 வெள்ளிக்கு வழங்கப்பட்டிருந்தன.

ஆனால் வங்கியில் போதுமான பணமில்லாததால் காசோலைகள் திரும்பி வந்தன. இதே போன்று இன்னும் சிலரையும் சத்தீஷ் ஏமாற்றியிருப்பதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

சத்தீஷ் மீது மொத்தம் 20 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. $700,000க்கு மேல் ஏமாற்றிய குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும். எஞ்சிய தொகைக்கான இதர குற்றச்சாட்டுகளும் அவருக்கு தண்டனை விதிக்கப் படும்போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. சத்தீஷ் தம் மீது சுமத்தப்பட்ட 20 குற்றச்சாட்டு களையும் ஒப்புக் கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!