ஒரே கூரையில் ஒருங்கிணைந்த உதவி

தனி­யார் துறை­யி­லும் அர­சாங்கம் சார்ந்த அமைப்­பு­க­ளி­லும் வேலை அனு­ப­வம் கொண்ட 48 வயது திரு வெங்­க­டே‌ஷ் நாயுடு, மக்­களுக்கு சேவை­யாற்­றும் பணி­யில் அதி­கம் கவ­னம் செலுத்­து­பவர்.

‘கிரேப்’ (Grab) நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றும்­போது, வாடிக்­கை­யா­ளர்­களை வெவ்­வேறு பிரி­வு­களாக வகைப்­ப­டுத்தி, அவர்­களின் குணா­தி­ய­சங்­க­ளை­யும் தேவை­க­ளை­யும் அறிந்து, அதன்­படி தர­மான சேவையை வழங்­கு­வதன் முக்­கி­யத்­து­வத்தை அறிந்து­கொண்­டார்.

தக­வல்­க­ளை­யும் தொழில்­நுட்­பத்­தை­யும் பயன்­ப­டுத்தி ஒவ்­வொரு பிரி­வி­ன­ரின் தேவை­களைப் பூர்த்தி செய்­ய­லாம் என்­பதை­யும் அவர் கற்­றுக்­கொண்­டார்.கற்­றுக்­கொண்ட வி‌‌ஷ­யங்­களை இன்று தமது வேலை­யில் அவர் நடை­மு­றைப்­ப­டுத்­து­கி­றார்.

திரு வெங்­க­டே‌ஷ் ‘அவர் தெம்­ப­னிஸ்’ மையத்தில் (Our Tampines Hub) பொதுச் சேவை நிலை­யத்­தின் துணை இயக்­கு நராக பணியாற்றுகிறார்.

வெவ்­வேறு அர­சாங்க அமைப்பு ­க­ளுக்குச் சென்று உதவி நாடும் குடி­யி­ருப்­பா­ளர்­களை ஒரே இடத்­தில் அச்­சே­வை­களை பெறச் செய்­யும் வச­தியை இந்­நி­லை­யம் வழங்கு­கிறது.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம், சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்பு, சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு, வட­கி­ழக்கு சமூக மேம்­பாட்டு மன்­றம், ‘ஆக்­டிவ்­எஸ்ஜி’ (ActiveSG), மக்­கள் கழ­கம் ஆகிய அமைப்­பு­க­ளின் சேவை­களை இந்­நி­லை­யத்­தில் நாட­லாம்.

ஆனால் சில வேளை­களில் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் தேவை­கள் கூடு­த­லாக இருக்­கும். மேற்­கொண்டு மற்ற அர­சாங்க அமைப்பு­க­ளுக்­கும் அவர்­கள் செல்ல வேண்­டி­ய­தாக இருக்­கும்.

உதா­ர­ணத்­திற்கு, வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக (வீவக) வீட்­டுக் கட்­ட­ணம் குறித்து அந்­நி­லை­யத்­திற்கு உதவி தேடி வரும் ஒரு­வர், அதன் தொடர்­பில் மத்­திய சேம­நிதி கழகத்துக்கும் செல்ல வேண்டியிருக்­கும். இதற்­காக அந்­ந­பர் ஒரு நாளில் இரு இடங்­களுக்கு செல்­லக்­கூ­டும்.

குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் வச­திக்­காக ஏன் மத்­திய சேம­நிதிச் சேவை­யை­யும் இந்­நி­லை­யத்­தில் வழங்­கி­டக்­கூ­டாது? போன்ற யோசனை திரு வெங்­க­டே­‌ஷுக்கு வர, நாள­டை­வில் கூடு­தல் அர­சாங்க சேவை­கள் இந்­நி­லை­யத்­தில் இடம்பெற்றன.

இன்றோ மத்­திய சேம­நிதிக் கழகம், சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம், என்­டர்­பிரைஸ் சிங்­கப்­பூர், தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் என 15 அமைப்பு ­க­ளின் 300க்கும் மேற்­பட்ட சேவை­கள் பொதுச் சேவை நிலை­யத்­தில் வழங்­கப்­ப­டு­கின்றன.

குடி­மக்­க­ளுக்கு வழங்­கும் சேவை­களை எப்­படி மேம்­ப­டுத்­த­லாம் என்ற நோக்­கில் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் கருத்­து­களை சேக­ரித்து, ஆய்­வு­கள் மேற்­கொண்டு, தொழில்­நுட்பத் தக­வல்­களை ஆராய்ந்து, முன்­னிலை அதி­காரி­ க­ளி­டம் எப்­படி புதிய சேவை­களை வழங்­கு­வது குறித்த பயிற்­சி­யும் கொடுத்­த­தில் இது சாத்­தி­ய­மா­னது.

அப்­படி ஒரு­வேளை நிலை­யத்­தின் அதி­கா­ரி­யால் ஒரு குறிப்­பிட்ட குடி­யி­ருப்­பா­ள­ரின் பிரச்­சி­னையைத் தீர்க்க முடியவில்லை என்றால், அது ­தொ­டர்­பான அமைப்­பின் அதி­கா­ரி­யி­டம் ஒரு தனி அறை­யில் காணொளி வழி ஆலோ­சனை பெறும் சேவை­யும் இந்­நி­லை­யத்­தில் உள்ளது. இது அந்த அமைப்­புக்கு குடியிருப்பாளர் நேர­டி­யா­கச் செல்­லாமல் சேவை யைப் பெறுவதால் அவரது நேரமும் மிச்­சமாகிறது.

“முதி­ய­வர் ஒரு­வர் குறிப்­பிட்ட உத­விக்­காக எங்­க­ளி­டம் வந்­தி­ருக்­க­லாம். ஆனால் அவர் ‘சாஸ்’ சலுகை அட்­டைக்கு விண்­ணப்­பித்து விட்­டாரா, பொதுப் போக்கு ­வ­ரத்து பற்­றுச்­சீட்­டு­க­ளுக்கு விண்­ணப்­பித்து விட்­டாரா அல்­லது மளிகைப் பொருட்­கள் வாங்­கும் பற்­றுச்­சீட்­டு­க­ளுக்கு தகுதி உள்ள வரா என அவர் பயன்­பெறக்­கூடிய அர­சாங்க அனு­கூ­லங்­களைப் பற்றி விளக்கி விண்­ணப்­பித்­தும் தரு­கி­றோம். எதிர்­பா­ராத உத­வி­யு­டன் மக்­கள் திருப்­தி­யு­டன் வீடு திரும்­புகின்­ற­னர்,” என்­றார் இந்நிலை­யத்தை 15 முன்­னி­லை அதி­காரி­ க­ளைக் கொண்டு வழி­நடத்த உத­வும் திரு வெங்­க­டே‌ஷ்.

தனி­யார் துறை­யில் பெற்ற திறன்­க­ளைக் கொண்டு குடி­யிருப்­பா­ளர்­க­ளுக்கு வழங்­கும் சேவையை மேம்­ப­டுத்த முடிந்ததில் திரு வெங்­க­டே‌ஷ் மிகுந்த மன­நி­றைவு அடை­கி­றார்.

“கொவிட்-19 கிரு­மித்­தொற்று தொடங்­கி­ய­தி­லி­ருந்து உதவி நாடி வந்த பல சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு ஒரே கூரை­யில் அனைத்து உத­வி­களை­யும் புரிந்து வரு­கி­றோம். அதி­க­ரித்த வேலை என்­றா­லும் தனி­நபர்­க­ளுக்கு முழு­மை­யான வகை­யில் உதவ முடி­வது மிக அர்­த்த­முள்­ள­தாக இருக்கிறது என்று நிலைய முன்­­நிலை அதி­கா­ரி­கள் கரு­து­கின்­ற­னர்,” என்­றார் தொடர்ந்து புத்­தாக்கத் தீர்­வு­களை கண்­ட­றிந்து நிலைய சேவை­களை மேம்­ப­டுத்த விரும்­பும் திரு வெங்­க­டே‌ஷ்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!