சீனாவில் உள்ள சிங்கப்பூர் சபை நல்லுறவுக்கு உதவும்

சீனா­வில் செயல்­படும் சிங்­கப்­பூர் வர்த்­தக சபை, இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் சமூக, பொரு­ளி­யல் உறவைப் பலப்­ப­டுத்­து­வ­தில் தீவி­ர­மான, முக்­கி­ய­மான பங்­காற்று­வதாக வர்த்­தக தொழில் துணை அமைச்­சர் ஆல்­வின் டான் தெரி­வித்­தார்.

கொவிட்-19 தொற்று சென்ற ஆண்­டில் பர­வத் தொடங்­கியபோது நிவா­ரண முயற்சிகளுக்கு ஆத­ர­வாக அந்­தச் சபை நிதி திரட்டி உத­வி­யதை கலா­சார, சமூக இளை­யர் துறை துணை அமைச்­சரு­மான அவர் சுட்­டி­னார்.

அந்தச் சபை­யும் பெய்­ஜிங்­கில் செயல்­படும் சிங்­கப்­பூர் தூத­ர­கமும் 'சிங்­கப்­பூர் குளோ­பல் நெட்­வொர்க்' என்ற அமைப்­பும் கூட்­டாக ஏற்­பாடு செய்து 'ஸூம்' வழி நடந்த சீனப் புத்­தாண்­டுக் கொண்­டாட்­டத்­தில் அமைச்­சர் மண்­ட­ரின் மொழி­யில் பேசி­னார்.

அதில் 200 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

சீன அர­சு­டன் தொடர்பு­ கொண்டு சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­களின் நலன்­க­ளைப் பேண­வும் சிங்­கப்­பூர் தொழி­ல­தி­பர்­கள் சீன தொழி­ல­தி­பர்­க­ளு­டன் தொழில், வர்த்­த­கக் கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்­திக்கொள்ள உத­வ­வும் சீனா­வில் 2002ஆம் ஆண்­டில் அந்­தச் சபை அமைக்­கப்­பட்­டது.

கொவிட்-19 தலை­காட்டத் தொடங்­கி­யது முதலே சிங்­கப்­பூ­ரும் சீனா­வும் அணுக்க தொடர்­பைக் கட்­டிக்­காத்து வந்­த­தா­க­ அமைச்சர் கூறினார்.

கிரு­மித்தொற்­றைச் சமா­ளிக்க ஒன்று மற்­றொன்­றுக்கு உத­வி­ய­தா­க­த் தெரி­வித்த அமைச்­சர், அதே நேரத்­தில் இரு­நா­டு­களும் பொரு­ளி­யல், வர்த்­தக ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்தி வந்­த­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!