ஐவர் பலியான விபத்து: அனுதாபம், அஞ்சலி

தஞ்­சோங் பகா­ரில் சனிக்­கி­ழமை ஐவர் மாண்ட விபத்து நிகழ்ந்த இடத்­தில் பூக்­களும் உடை­களும் புகைப்­ப­ட­மும் வைக்­கப்­பட்டு இருந்­தன. மெழு­கு­வர்த்திகள் ஏற்­றப்­பட்டு இருந்­தன. இரங்­கல் கடி­தம் ஒன்­றும் காணப்­பட்­டது.

அந்த ஐந்து பேரும் சென்ற பிஎம்­ட­பிள்யூ கார் அங்­குள்ள கடை­வீடு ஒன்­றில் மோதி தீப்­பி­டித்து எரிந்­த­தில் ஒரு­வர்­கூட உயிர் பிழைக்­க­வில்லை.

விபத்தில் சிக்கியவர்கள் 'ஏவிவா ஃபைனான்­ஷி­யல் அட்­வை­சர்ஸ்' என்ற நிறு­வ­னத்­தின் பிர­மு­கர்­களாக முன்பு பணி­யாற்­றி­னர். மர­ணமடைந்த ஐவ­ரில் நான்கு பேர் அந்த நிறு­வ­னத்­தில் முன்பு நிதித்­துறை ஆலோ­சகர்­க­ளாக இருந்­த­னர். அவர்­களில் ஒரு­வ­ரான ஜொனாத்­தன் லோங் என்­ப­வர் விபத்­துக்­குள்­ளான காரை ஓட்டி வந்­த­தாக நம்­பப்­ப­டு­கிறது.

திரு வோங்­கின் காத­லி­யான குமாரி ரேபி ஒ சியூ ஹுவே, 26, இப்­போது மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கி­றார்.

அவர் தன் காத­ல­ரைக் காப்­பாற்ற முயன்­ற­போது படு­மோ­ச­மாக தீப்­புண் ஏற்­பட்­ட­தால் பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­தா­கத் தெரி­ய­வந்­தது.

அந்­தப் பெண் முன்பு ஏவிவா நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றி­னார். பிறகு விமான சிப்­பந்­தி­யாக வேலை பார்த்­தார். விபத்து நிகழ்ந்­தது முதலே நண்­பர்­களும் குடும்­பத்­தி­ன­ரும் சமூக ஊட­கங்களில் அதிர்ச்­சி­யை­யும் அனு­தா­பத்­தை­யும் தெரி­வித்து வரு­கி­றார்­கள்.

இத­னி­டையே, இந்த விபத்து நிகழ்ந்­ததை அடுத்து தஞ்­சோங் பகா­ரில் அம­லாக்க நட­வ­டிக்­கை­களை­யும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை­யும் மேம்­ப­டுத்­து­வது பற்றி தான் ஆராய்ந்து வரு­வ­தாக போக்குவரத்து போலிஸ் கூறி­யதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

இவ்­வே­ளை­யில், கார் விபத்து நிகழ்ந்த கடைவீட்டுக் கட்­ட­டம் கட்டு­மான ரீதி­யில் பாதிக்­கப்­ப­ட­வில்லை என்று கட்­டட, கட்­டு­மான ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

இத­னி­டையே, நேற்று விபத்து நிகழ்ந்த இடத்­துக்­குச் சென்ற பிர­தமர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா, அந்­தப் பகு­தி­யில் நில­வ­ரங்­களை மேம்­ப­டுத்த என்ன செய்ய முடி­யும் என்­பது பற்றி ஆரா­யும்­படி தான் போக்­கு­வ­ரத்து போலி­சாரை கேட்­டுக்­கொண்டு இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

இதில் படச்­சா­த­னங்­க­ள், வேகத் தடைகளைப் பரி­சோ­தித்­துப் பார்க்­க­லாம் என்று தெரி­வித்த அமைச்­சர், போக்­கு­வ­ரத்து போலிஸ் நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­து­டன் சேர்ந்து செயல்­பட வேண்டி இருக்­கும் என்­றும் என்­னென்ன செய்­ய­லாம் என்­பதை அந்த இரண்டு அமைப்பு­களும் கண்­ட­றி­யும் என்­றும் கூறி­னார்.

அம­லாக்க நட­வ­டிக்­கை­களை 24 மணி நேர­மும் நடை­மு­றைப்­படுத்­து­வது மிக­வும் சிர­மம் என்ற அவர், வாகன ஓட்­டு­நர்­க­ளுக்கு ஒரு செய்தி விடுத்­தார்.

"வாக­னத்தை பந்­த­யம் விடு­வது­போல் வேக­மாக ஓட்­டிச் செல்­லா­தீர். அப்­படி செல்­வ­தால் ஏற்­ப­டக்­கூ­டிய தொடர் விளை­வு­கள் நீண்ட நெடு­நாட்­க­ளுக்குப் பெரும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­திவிடும்," என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!