புதிதாக 14 பேருக்கு தொற்று; அனைவருமே இங்கு வந்தவர்கள்

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் வாக்­கில் புதி­தாக 14 பேருக்கு கிருமித் தொற்று உறு­தி­யா­னது.

அவர்­கள் அனை­வ­ருமே வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள். அவர்­களில் 13 பேருக்கு வீட்­டி­லேயே தனி­மை­யில் இருக்க வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டது.

மற்­றொ­ரு­வ­ருக்கு முத­லில் தொற்று இல்லை என்­பது தெரி­ய­வந்­தது. ஆனால் அவ­ருக்கு தொற்று இருந்­தது பின்­னர் தெரி­ய­வந்­தது.

சிங்­கப்­பூ­ரில் கடந்த ஒரு வாரத்­தில் புதி­தாக எட்டுப் பேர் சமூ­கத்­தொற்­றுக்கு ஆளாகி இருக்­கி­றார்­கள். அதற்கு முந்­தைய வாரத்­தில் ஒரே ஒரு­வர் மட்­டுமே சமூ­கத்­தொற்­றுக்கு ஆளாகி இருந்­தார்.

அந்த எட்டு பேரில் ஐந்து பேர் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் தொடர்பு இல்­லா­த­வர்கள் என்று சனிக்­கி­ழமை அமைச்சு அறி­வித்து இருந்­தது.

சனிக்­கி­ழ­மை­யன்று சமூ­கத்­தில் புதி­தாக யாருக்­கும் தொற்று இல்லை. இருந்­தா­லும் அன்று வெளி­நா­டு­களில் இருந்து வந்த ஒன்­பது பேருக்குத் தொற்று இருந்­தது தெரி­ய­வந்­தது.

பிப்­ர­வரி 7ஆம் தேதிக்­கும் கடந்த சனிக்­கி­ழ­மைக்கும் இடை­யில் தொற்று கண்­ட­றி­யப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்ட 111 பேரில் 52 பேருக்கு ஏற்­கெ­னவே தொற்று இருந்­தி­ருக்­கிறது என்­பது தெரி­ய­வந்­தது.

30 பேருக்குத் தொற்று இல்லை. 29 பேரின் பரி­சோ­தனை முடி­வு­கள் இனி­மேல்­தான் வர­வேண்­டும் என்று அமைச்சு தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்றுக்கு ஆளா­னோ­ரின் மொத்த எண்­ணிக்கை 59,800 ஆக இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!