எதிர்காலக் கலைஞர்களுக்கு ஊக்கமளித்த இசைக் கலைஞர்

மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு மையம் கடந்த வாரம் தொகுத்து வழங்­கிய ‘இன் கான்­வர்­சே­ஷன் வித்’ என்­னும் பிரத்­தி­யேக நிகழ்ச்­சி­யில் வளர்ந்­து­வ­ரும் ‘ராப்’ இசைக் கலை­ஞர் யங் ராஜா கலந்­து­கொண்டு கலை­ஞ­ராக தமது பயணத்தைப் பற்றி இளை­யர்­க­ளி­டம் பகிர்ந்­து­கொண்­டார்.

‘யூனி­வர்­சல் மியூ­சிக்’ குழு­மத்­தால் உல­க­ள­வில் விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­படும் முதல் சிங்­கப்­பூ­ரர் என்ற பெரு­மைக்­கு­ரிய உள்­ளூர் நட்சத்திரக் கலை­ஞ­ரான இவர், நடி­கர், பாட­லா­சி­ரி­யர், சொல்­லி­சைக் கலை­ஞ­ராக பல பரி­மா­ணங்­களில் தாம் எதிர்­கொண்ட சவால்­க­ளைப் பற்றி எடுத்­து­ரைத்­தார்.

இந்த நிகழ்ச்­சி­யில் ‘கேர் சிங்கப்­பூர்’, சமூக நிறு­வ­ன­மான ‘கிளிஃப்’, சிங்­கப்­பூர் தொழில்­நுட்பக் கல்­விக் கழ­கம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த ஏறக்­குறைய 40 இளை­யர்­கள் பங்கேற்று யங் ராஜாவுடன் உரையாடினர்.

பங்­கேற்­பா­ளர்­க­ளின் கேள்­வி­களுக்கு மிக யதார்த்­த­மான முறை­யில் பதி­ல­ளித்து அவர்­களை உற்சாகப்­ப­டுத்­தி­னார் யங் ராஜா.

இந்­நி­கழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட 15 வயது ஈசன் நவீன், யங் ராஜா­வின் தீவிர ரசி­கர்.

வருங்­கா­லத்­தில் பிரபலமான நகைச்­சுவை நடி­க­ராக வேண்­டும் என்ற கன­வு­டன் இருக்­கும் இவருக்கு யங் ராஜா­வின் கலைப் பய­ணம் ஒரு முன்­மா­தி­ரி­யாக விளங்­கு­வ­தா­க இவர் கூறி­னார்.

“யங் ராஜா எனக்கு மிக­வும் பிடித்த சொல்­லி­சைக் கலை­ஞர். அவர் இந்­நி­கழ்ச்­சி­யில் கூறிய ஒவ்­வொரு அறி­வு­ரை­யை­யும் எனது வாழ்க்­கை­யில் செயல்­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.

“ஆர்­வம், திறன் மட்­டும் இருந்­தால் போதாது. இலக்கை எட்ட கடின உழைப்­பும் நேர்­மறை சிந்­த­னை­யும் தேவை என்று அவர் கூறிய வார்த்­தை­கள் என்னை உற்­சா­கப்­படுத்­தின,” என்­றார் நவீன்.

யங் ராஜா­வின் வெற்­றிப் பயணத்தைப் பற்றிக் கேட்­ட­றிந்த இளை­யர்­களில் ‘கிளிஃப்’ அமைப்­பைச் சேர்ந்த 13 வயது ஏஞ்­ச­லினா தையல்­நா­ய­கி­யும் ஒரு­வர்.

தமிழ், ஆங்­கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எவ்வாறு சர­ள­மாக பாட முடி­கிறது என்று அவர் கேட்­டார்.

அதற்­குப் பதி­ல­ளித்த யங் ராஜா, வீட்­டில் குடும்­பத்­து­டன் தமி­ழி­லும் வெளியே நண்­பர்­க­ளு­டன் ஆங்­கி­லத்­தி­லும் தாம் உரை­யா­டு­வதே இரு­மொழி ஆற்­ற­லுக்­கான கார­ணங்­களில் ஒன்று என்றார்.

தாய்­மொழியைக் கூச்­சம் இல்­லா­மல் தைரி­ய­மாக பேசப் பழ­கு­மா­றும் இளை­யர்­களை இவர் ஊக்கு­வித்­தார்.

“எனது கலைப் பய­ணத்தை இளை­யர்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்ள வாய்ப்பு வழங்­கப்­பட்­டதை எனக்குக் கிடைத்த பெரிய மரி­யாதை­யா­கக் கரு­து­கி­றேன்.

“இளை­யர்­க­ளு­டன் உரை­யா­டி­யது புது­மை­யான அனு­ப­வ­மாக அமைந்­தது. இளை­யர்­கள் தைரி­ய­மாக முன்­வந்து பல நல்ல கேள்­வி­கள் கேட்­ப­தைப் பார்த்து எனக்­குள்­ளேயே ஒரு­வித உத்­வே­கம் பிறந்­தி­ருக்­கிறது,” என்­றார் யங் ராஜா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!