புதிய தனியார்வீடு விற்பனை எட்டு ஆண்டு கால வரலாறு காணா அதிகரிப்பு

புதிய தனியார்வீடு விற்பனை எட்டு ஆண்டு கால வரலாறு காணா அதிகரிப்பு

1 mins read
d08fcb2d-35d7-4705-96be-4c24667be639
படம்: லியன்ஹ சாவ்பாவ். -

சிங்கப்பூரில் புதிய தனியார் வீட்டு விலை எட்டு ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு கடந்த ஜனவரி மாதம் கூடியது. குடியிருப்புச் சொத்துகளைக் கட்டி விற்பவர்கள் பல்வேறு புதிய வீடு விற்பனைத் திட்டங்களைத் தொடங்கினர்.

அந்தத் திட்டங்களில் 1,862 வீடுகளைக் கொண்ட 'நார்மெண்டன் பார்க்' மற்றும் 429 வீடுகளைக் கொண்ட 'தி ரீஃப் அட் கிங்ஸ் டாக்ஸ்' ஆகியவை அடங்கும்.

இந்தத் திட்ட வீடுகளே விற்கப்பட்ட வீடுகளில் பாதிக்கும் அதிகம். டிசம்பரில் விற்பனையான புதிய தனியார் வீடுகள் 1,217.

ஜனவரியில் இந்த விற்பனை 32 விழுக்காடு கூடி 1,609 வீடுகளாக அதிகரித்தது.

இதற்கு முன் 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம்தான் தனியார் வீடுகள் அதிகம் விற்பனையாயின. அந்த மாதத்தில் 2,028 வீடுகள் விற்கப்பட்டன.

2018 ஜூலை மாதம் 1,724 வீடுகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அதற்குப் பிறகு எந்தவொரு மாதத்திலும் இந்த அளவுக்கு ஆக அதிக விற்பனை இடம்பெறவில்லை.

முழு விவரம் நாளைய முரசில்