சிங்­கப்­பூ­ரில் பெட்ரோல் விலை உடனடியாக உயர்வு

சிங்­கப்­பூ­ரில் பெட்ரோல் விலை உடனடியாக உயர்வு

1 mins read
0ed55d34-56d9-413d-b553-d812ba11f402
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் பெட்­ரோல் விலை நேற்று முதல் உயர்ந்­தது. அந்த விலை உயர்­வைப் பற்றி துணைப் பிர­த­ம­ரு­ம் நிதி அமைச்­ச­ருமான ஹெங் சுவீ கியட் நேற்று வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் அறி­வித்­தார்.

அதன்­படி முதல்­ரக பெட்­ரோல் விலை, அதில் கலந்­துள்ள கரிம அள­வைப் பொறுத்து 1 லிட்­ட­ருக்கு 15 காசு முதல் 79 காசு வரை உய­ர்ந்தது. நடுத்­தர ரக பெட்­ரோல் விலை 1 லிட்­ட­ருக்கு 10 காசு முதல் 66 காசு வரை கூடியது.

சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த அணு­கு­முறை­யைக் கை­கொள்ள சிங்­கப்­பூர் பெரிய அள­வில் முயன்று வரு­கிறது.

இந்த முயற்­சி­க­ளின் ஒரு பகு­தி­யாக பெட்­ரோல் வாக­னப் பய­னீட்டை மக்­கள் குறைத்­துக்கொள்ள ஊக்­க­மூட்­டும் வகை­யில் விலை உயர்வு இடம்­பெ­று­கிறது.

விலை உயர்வு கார­ண­மாக கூடும் செல­வைச் சமா­ளிக்க உத­வும் வகை­யில் வாகன உரி­மை­யா­ளர்­க­ளுக்குச் சாலை வரி மற்­றும் கூடு­தல் பெட்­ரோல் தீர்வை தள்­ளு­ப­டி­கள் வழங்­கப்­படும் என்று துணைப் பிரதமர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் பெட்­ரோல் விலை இதற்கு முன் 2015ல் உயர்த்­தப்­பட்­டது.

பெட்­ரோல் மற்­றும் பெட்ரோல்-மின்­சார வாக­னங்­களுக்குத் தள்­ளு­ப­டி­களை வழங்­கு­வ­தற்­காக ஏறக்­கு­றைய $113 மில்­லி­யன் ஒதுக்­கப்­பட்டு இருக்­கிறது.