இணையம் வழி வாங்கப்பட்டு விமானம் மூலமாக அல்லது அஞ்சல் மூலமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 2023 ஜனவரி 1 முதல் பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
$400 அல்லது அதற்குக் குறைவான மதிப்புள்ள பொருட்களை இணையம் வழி வாங்கி வெளிநாடுகளிலிருந்து விமானம் அல்லது அஞ்சல் வழியாக சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்யும்போது தற்போது வரி விதிக்கப்படுவதில்லை.
ஆனால் அதே மதிப்புள்ள பொருட்களை உள்ளூரில் வாங்கும்போது ஜிஎஸ்டி செலுத்த வேண்டியுள்ளது. இந்த வேறுபாட்டைக் களைய வரிவிதிக்கப்படுகிறது.

